"கடம்பூர் ராஜுவா" அவர் யார் என்றே தெரியாது.. ஒரே போடாக போட்ட அமைச்சர் துரைமுருகன்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு யார் என்றே தனக்கு தெரியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பழைய கதவணை கடந்த 2018 மாதம் ஆகஸ்ட் 22ம் தேதி வெள்ள பெருக்கால் 9 மதகுகள் திடீரென உடைந்தன. புதிய கொள்ளிடம் கதவணை 2019 மார்ச்சில் ரூ 387 கோடியில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தப் பணிகள் முடிக்க இருபத்தி நான்கு மாத காலம் ஆகியுள்ளது. புதிய கதவணையில் 45 மதகுகள் உள்ள பகுதியில் தற்போது 100 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேலணையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் துரைமுருகன் பேட்டி

அமைச்சர் துரைமுருகன் பேட்டி

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து வெள்ள காலங்களில் காவிரி செல்லும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்ட சாத்தியக்கூறுகள் உள்ளதா என்ற கேள்விக்கு காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே இருந்த மூத்த பொறியாளர்களை கலந்து ஆலோசித்தபோது தண்ணீரை சேமிக்க வாய்ப்பில்லை என்றார்கள்.

விரைவில் முடிவு

விரைவில் முடிவு

தற்போது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தில் இறந்தவர்களையே பிழைக்க வைத்து விடுகிறார்கள். அதனால் வெள்ள நீரை சேமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளும். தெலங்கானாவில் உள்ள நீர்த்திட்டங்களை போல் தமிழகத்தில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. விரைவில் அது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.

அதிமுக மீது விமர்சனம்

அதிமுக மீது விமர்சனம்

தொடர்ந்து, சேலம் மேட்டூர் - சரபங்கா நதிகள் இணைப்புப் பணிகள் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை. காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அதிமுக திட்டமல்ல

அதிமுக திட்டமல்ல

தொடர்ந்து, காவிரி குண்டாறு திட்டத்தை திமுக முடக்குவதாக அதிமுக குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது அதிமுக அரசின் திட்டமல்ல. அது மத்திய அரசின் திட்டம். தமிழகத்தில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை என்று குற்றச்சாட்டியுள்ளார்.

கடம்பூர் ராஜு யார்?

கடம்பூர் ராஜு யார்?

முதலமைச்சரை சில அமைச்சர்கள் தூங்கி விழிக்க விடாமல் செய்கிறார்களே.. அதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன? என்ற கேள்விக்கு, அது குறித்து தான் அவரே சொல்லிவிட்டாரே மேற்கொண்டு நான் என்ன சொல்வது? என்று பதில் அளித்தார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடுமா? என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டிருக்கிறாரே? என்ற கேள்விக்கு, எனக்கு அவர் யார் என்றே தெரியாது என்று அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+