நாட்டு நடப்பு பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது! திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
திருச்சி: நாட்டு நடப்பு பற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதுவுமே தெரியாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை நாட்டு மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் வீட்டு மக்களை பற்றி மட்டுமே கவலைப்படுவதாக விமர்சித்தார்.
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர் இதனைக் கூறினார்.

சொத்து வரி
சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் சென்று தமிழக அரசு மீதான தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், சொத்து வரி உயர்வால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வசித்து வந்த வாடகை வீட்டுத்தாரர்கள் இனி மாதம் ரூ.2,500 வாடகை செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மக்கள் விரோதம்
திமுக அரசை பொறுத்தவரை மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் வரியே உயர்த்தாத அரசு அம்மாவின் அரசு எனவும் எடப்பாடி பழனிசாமி பேசினார். சொத்து வரியை இந்தளவுக்கு உயர்த்துங்கள் என எந்த இடத்திலும் மத்திய அரசு கூறவில்லை என்றும் மத்திய அரசு மீது பழியை சுமத்தி திமுக அரசு தப்பிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

நிர்வாக திறனில்லை
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாகத் திறனில்லை என்றும் திமுக தேர்தல் அறிக்கை 487 வது வரிசையில் சொத்து வரியை உயர்த்தமாட்டோம் என கூறிவிட்டு இப்போது அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி சாடினார். மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என திமுக அரசு நினைப்பதாகவும் சொத்துவரி உயர்வை திரும்பபெற வேண்டும் எனவும் அவர் பேசினார்.

அதிமுக ஆட்சியில்
தாலிக்கு தங்கம் உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக அவற்றையெல்லாம் திமுக அரசு கைவிட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை மளமளவென உயர்ந்திருப்பதாகவும் இன்று நடுத்தர வர்க்கத்தினரால் வீடு கட்ட முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications