Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் விளக்கம் தரலன்னா அதான் அர்த்தம்.. பிரிக்க நினைச்சா அழிஞ்சு போவீங்க.. சாபம் விட்ட பொன்னார்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : தனி திராவிட நாடு கேட்டு கிளம்பினால், ஒருவர் கூட பின்னால் வர மாட்டார்கள். இது தமிழர்கள் பூமி. அசைக்க நினைத்தால், அசிங்கப்பட்டு அழிந்து போவீர்கள் என பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி ஆ.ராசா, மாநில சுயாட்சி வேண்டும், எங்களை தனி தமிழ்நாடு கோரிக்கையை நோக்கித் தள்ளாதீர்கள் எனப் பேசியது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், தனி நாடு கேட்பதை அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக போராட்டம்

பாஜக போராட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

 பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுகவின் தவறான ஆட்சியை, ஊழல் நிறைந்த ஆட்சியை, போதைகளுக்கு துணை போகும் ஆட்சியை, தமிழை அழிக்கின்ற ஆட்சியை கண்டிக்கும் விதமாக பா.ஜ.கவின் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாடு முழுக்க நடைபெற்றிருக்கிறது. 47 ஆயிரம் மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே தோற்றுப் போகும் அளவிற்கு தமிழகத்தில் கல்வித்தரம் இருக்கிறது. தமிழை அந்தளவிற்கு அழித்திருக்கிறார்கள். ஊழல் தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கிறது.

பிரிவினைவாதம்

பிரிவினைவாதம்

தமிழக முதல்வர் இருக்கின்ற மேடையிலேயே, பிரிவினைவாதம் பேசக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள். தமிழக முதல்வர் இருந்த மேடையிலேயே தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசும்போது, அண்ணா வழியை நாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். பெரியார் வழியை பின்பற்றும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்' எனப் பேசியிருக்கிறார். அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல. தி.மு.கவினுடைய கொள்கை பரப்புச் செயலாளர்.

முதல்வர் விளக்க வேண்டும்

முதல்வர் விளக்க வேண்டும்

கடந்த, 1960களில் நடந்த சம்பவத்தை, தி.மு.க மூத்த நிர்வாகி கோடிட்டுக் காட்டி பேசுவது, மீண்டும், 60 ஆண்டுகளுக்கு பிந்தைய நிலைக்குப் போவது போல் உள்ளது. அது, தி.மு.கவின் கருத்தா, தி.மு.க அரசின் கருத்தா, தமிழக முதல்வரின் கருத்தா என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். அதற்கு விளக்கம் சொல்லத் தவறினால், பிரிவினைவாதத்தை நோக்கி அவர் அடி எடுத்து வைப்பதாக அர்த்தம்.

உங்களுக்கு பெருமையா

உங்களுக்கு பெருமையா

அப்படி ஒருவேளை தமிழகத்தை பிரிக்க நினைத்தால், எக்காரணத்தைக் கொண்டும் அதற்கு அனுமதிக்க மாட்டோம். ஈ.வெ.ராவின் வழித்தோன்றல்கள் என்று சொல்வது உங்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள், கட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்றவர்கள் வாழ்ந்த இந்த பூமியில், தேச பக்தர்களின் வழித் தோன்றல்கள் என்று, எங்களை சொல்லிக் கொள்வோம்.

 அசிங்கப்பட்டு அழிந்து போவீர்கள்

அசிங்கப்பட்டு அழிந்து போவீர்கள்

சவால் விடுத்தால், அதை நாங்கள் ஏற்று, அந்த தேசத் தலைவர்களின் வழியில் போராடி வென்றே தீருவோம். பிரிவினைவாதம் பேசுவதை, தி.மு.கவுக்கு வாக்களித்தவர்கள் உட்பட எட்டு கோடி தமிழர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்த பிரிவினைவாதத்திற்காகவா மக்கள் திமுக-விற்கு வாக்களித்தார்கள். தனி திராவிட நாடு கேட்டு கிளம்பினால், நீங்கள் செல்லுங்கள். ஒருவர் கூட பின்னால் வர மாட்டார்கள். உங்களுக்கென தனியொரு ராஜ்ஜியத்தை கடலுக்கு அப்பால் போய் அமைத்துக் கொள்ளுங்கள். இது தமிழர்கள் பூமி. அசைக்க நினைத்தால், அசிங்கப்பட்டு அழிந்து போவீர்கள்" எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+