Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தோல்வி".. நிருபர் கேட்ட கேள்வி.. அதிமுக, திமுகவை "வம்பிழுத்த" பிரேமலதா விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: வெற்றி தோல்வி சகஜம் எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம் என்று திருச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    தோல்வி.. நிருபர் கேட்ட கேள்வி.. அதிமுக, திமுகவை வம்பிழுத்த பிரேமலதா விஜயகாந்த்!

    திண்டுக்கல்லில் நடைபெற உள்ள கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார்.

    அவருக்கு கட்சி தொண்டர்கள் சால்வை, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

    பெட்ரோல் டீசல்

    பெட்ரோல் டீசல்

    அவர் கூறுகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாதிக்கும். இது எந்த விதத்திலும் நியாயமில்லை. கொரோனா காலகட்டத்தில் பலர் வேலையிழந்து உள்ள நிலையில் அனைத்து விலைவாசியும் உயர்ந்து உள்ளது. கேஸ் விலை உயர்வு மக்களை அதிகமாக பாதிக்கும்.

    அரசு சுமை

    அரசு சுமை

    பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அரசு சுமைகளை மக்கள் மீது சுமத்த கூடாது. மக்களுக்காகத்தான் அரசு உள்ளது என்றார். திமுக அதிமுக அடுத்தபடியாக தேமுதிக என்று இருந்த நிலையில் தற்போது அந்த கட்சி தோல்வி அடைந்துள்ளது என செய்தியாளர் பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பினார்.

    10 ஆண்டுகள்

    10 ஆண்டுகள்

    அதற்கு அவர் எல்லாக் கட்சியும் அப்படித்தான். வெற்றியும் தோல்வியும் சகஜம். 10 ஆண்டு ஆட்சியில் இல்லாத கட்சி தற்பொழுது ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சி தற்போது ஆட்சி இல்லாமல் இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம். எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம். தாலிக்கு தங்கம் திருமண உதவி தொகை திட்டம் ஆகியவற்றை மீண்டும் தொடர வேண்டும்.

     தாலிக்கு தங்கம்

    தாலிக்கு தங்கம்

    பெண்களுக்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி வைக்கக் கூடாது. ஆளும் கட்சிக்கு ஏற்ற மாதிரி திட்டத்தின் பெயரை மாற்றி திட்டத்தைத் தொடரலாம் என தெரிவித்தார். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைத்து படு தோல்வியை சந்தித்தது. பிரேமலதா கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+