தல அஜித் வர்றாரு.. திருச்சியில் கிளம்பிய வதந்தி! வந்தது யார் தெரியுமா? ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி..!
திருச்சி : ரசிகர்களால் தல என அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருவதாக வதந்தி பரவிய நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை காண கோவிலில் குவிந்தனர். ஆனால் அங்கு நடந்ததோ வேறு.. என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம்..
Recommended Video
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாட்டில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான்.
இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வருவது வழக்கம்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்
குறிப்பாக ஆடி மாதங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தோறும் சுவாமி தரிசனம் செய்வதற்காக குவிந்து வருவது பழக்கம் மேலும் மொட்டை அடிப்பது உள்ளிட்ட நேர்த்திக்கடன்களையும் செலுத்துவர் ஆடி அமாவாசை வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரை திணறும் அளவுக்கு அதிக அளவில் பக்தர்கள் திரள்வார்.

தரிசனம்
பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வருவது வழக்கம் தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மனை தரிசித்து ஆசி பெற்றுச் சென்றார். அப்போது பேசிய அவர் தான் வாழ்வில் நன்றாக இருப்பதற்கு காரணம் சமயபுரம் மாரியம்மன் தான் என சிலாகித்து பேசினார்.

அஜித்குமார்
இந்த நிலையில் தான் நேற்று இரவு ஒரு சம்பவம் நடைபெற்றது அதாவது தமிழ் திரை உலகில் தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவதாக தகவல் பரவியது இதை எடுத்து கோவில் பிரகாரம், பின் வாசல், முன் வாசல் என அனைத்து பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ரஞ்சித் குமாரை காண்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வராத நிலையில் திடீரென்று பிரபல நடிகை ஒருவர் வெளியே வந்தார் அவரையும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முற்பட்டனர்.

யாஷிகா ஆனந்த்
அவர் வேறு யாருமில்லை இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து சமீபத்தில் விபத்தில் சிக்கி மீண்டு வந்திருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் தான். கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் வெளியேற முடியாத அளவுக்கு செல்பி எடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை எடுத்து அங்கு வந்த போலீசார் கூட்டத்தினரை ஒருவராக சமாளித்து யாஷிகா ஆனந்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அதே நேரத்தில் அஜித் குமார் வருகிறார் என வதந்தி பரப்பியவர்கள் யார் என அஜித் ரசிகர்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications