"திருச்சி ஒட்டுமொத்த கிராமமே ஆக்கிரமிப்பு.. 389 ஏக்கர் நிலம் எங்களுக்கு சொந்தம்!" வக்பு வாரிய தலைவர்
திருச்சி: திருச்சியில் திருச்செந்துறை என்ற கிராமமே தங்களுக்குச் சொந்தம் என்று வக்பு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாகத் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை என்ற ஒட்டுமொத்த கிராமமே வக்பு வாரியத்திற்குச் சொந்தம் என்று சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது அக்கிராமத்தில் வசிப்போர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராட்டத்தில் நடத்தியதை அடுத்து, சமாதானம் செய்யும் முயற்சிகளும் எடுக்கப்பட்டது.

விளக்கம்
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பாக மாநிலத்தில் இருக்கும் வக்பு வாரியத்தின் சொத்துக்களைப் பாதுகாக்க அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கும் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரகுமான், "வக்பு வாரிய சொத்துக்கள் அனைத்தும் கண்டறிந்து, அளவீடு செய்து, மேலும் புதிதாகச் சேர்ந்த சொத்துகள் சேர்க்கப்பட்டு வருகிறது. வக்பு வாரிய ஆக்கிரமிப்பு சொத்துகளையும், தவறாக ஆவணங்கள் தயாரித்து அபகரிக்கப்பட்ட வக்பு வாரிய சொத்துகளை மீட்டெடுக்க வேண்டும்..

மீட்கும் முயற்சி
இந்த ஆண்டு வாரியத்திற்குச் சொந்தமான சர்வே எண் எடுத்தோம், இந்த சொத்துகளை வாங்கவோ.. விற்கவோ கூடாது என்று மக்களிடம் தெரியப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். வக்பு வாரிய சொத்துக்களைத் தெரிந்தோ தெரியாமலோ வாங்கவும் விற்கவும் தடை செய்ய சில ஏற்பாடு செய்து வருகிறோம்.. சார்பதிவாளர் அலுவலகங்களில் வக்பு வாரிய சொத்துக்களை மீட்கும் முயற்சியில் நாங்கள் இறங்கி உள்ளோம்.

கிராமம் ஆக்கிரமிப்பு
கிராமத்தின் பெயரில் 1954 பதிவிட்டுள்ளதோ அவற்றைக் கண்டறியும் பணி நடைபெறுகிறது. தனிப்பட்ட சர்வே எண் குறிப்பிட்ட சொத்துக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளோம். திருச்சியில் உள்ள திருச்செந்தூரை என்ற கிராமத்தின் சுமார் 389 ஏக்கர் நிலம் வக்ஃபு வாரிய சொத்து என்று 1954 அரசாங்க நில அளவீடு புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது இப்போது ஆக்கிரமிப்பு சொத்தாக உள்ளது.

மத ரீதியானது இல்லை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வக்பு வாரிய சொத்துகள் உள்ளன. 10 சென்ட் இடத்தை , 60 ஆண்டுகளில் 10 பேர் வாங்கி இருக்கலாம். ஆனால் அது சார் பதிவாளர் அலுவலகத்தில் தெரியப் படுத்தாமல் அல்லது பதிவு செய்யாமல் இருக்கலாம், அதை மீட்டு ஒழுங்குபடுத்தும் முறையை மேற்கொண்டு வருகிறோம். இதை மத ரீதியான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

மக்கள் பயன்பாடு
பொதுமக்கள் நலனுக்காகச் சிந்திப்பவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள். வக்பு வாரிய சொத்துகள் குறித்த ஆவண பாதுகாப்பு மூலம் முழுமையான தகவல் கிடைத்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை எதையும் செய்யப் போவது இல்லை. திறந்த இடமாக வக்பு வாரிய சொத்தாக இருந்தால். மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும். மேலும், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் காம்பிளக்ஸ் போன்றவற்றைக் கட்ட வரவேற்கிறோம்.

வாடகை
வக்பு வாரிய சொத்துகளில் நீண்ட காலமாக வீடு கட்டி குடியிருப்பவர்களைக் கண்டறிந்தால் அவர்களை அகற்ற முடியாது, இதன் காரணமாக அவர்கள் அந்தந்த வக்பு நிறுவனங்களுக்குத் தரை வாடகை செலுத்தி, தொடர்ந்து அதே இடத்தில் இருந்து கொள்ளலாம்" என்று அவர் குறிப்பிட்டார்.

போராட்டம்
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு திருச்சி திருச்செந்துறை என்ற ஒட்டுமொத்த கிராமமே வக்பு வாரியத்திற்குச் சொந்தம் என்று வக்பு வாரியம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. அந்தப் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இது போன்ற அறிவிப்பு அங்குள்ளவர்களைச் சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications