திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீட்ல விசேஷங்கன்னு சும்மானாச்சுக்கும் சொல்லி.. வாக்காளர்களுக்கு விருந்து வச்சா.. கலெக்டர் வார்னிங்

போலி விசேஷங்கள் வைத்து பணப்பட்டுவாடா நடத்தக்கூடாது என திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருச்சி: காதுகுத்து, கல்யாணம், விசேஷம்...னு சொல்லி வாக்காளர்களுக்கு போலி விருந்து வெச்சால் கம்பி எண்ண வேண்டியதுதான்.. என்று திருச்சி கலெக்டர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டி உள்ளன. இதில் பறக்கும்படி எவ்வளவு துரிதமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்டால்கூட, வாக்காளர்களுக்கு ஆங்காங்கே திரைமறைவில் பணப்பட்டுவாடா நடந்துகொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் மாவட்ட கலெக்டர்கள் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக
திருச்சி மாவட்ட கலெக்டர் சு. சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுரையில் பரபரப்பு.. தனியார் வாகனத்தில் 47 கிலோ தங்க நகைகள்.. இதுவரை ரூ. 25 கோடி சிக்கியது மதுரையில் பரபரப்பு.. தனியார் வாகனத்தில் 47 கிலோ தங்க நகைகள்.. இதுவரை ரூ. 25 கோடி சிக்கியது

 வழிபாட்டு இடம்

வழிபாட்டு இடம்

அதில், "ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ சாதி, மதம், மற்றும் மொழியினரிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தனிநபர் விமர்சனம் செய்தல் கூடாது. சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது. வழிபாட்டு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது.

வாக்காளர்கள்

வாக்காளர்கள்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்களை ஒருசாரருக்கே வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அச்சுறுத்தவும் கூடாது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பணம், பொருள் எதுவும் பெறக்கூடாது. அவ்வாறு பெற்றால் தேர்தல் விதிமுறைகளின்படி வாக்காளர்களும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.

 போலி விருந்து

போலி விருந்து

வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகளை நடத்தி வாக்காளர்களுக்கு விருந்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

English summary
Trichy Collector Sivarasu has warned that Money should not be distributed to the Voters by fake ceremonies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X