பணியிடத்தில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்.. ரிலீஸானது வீடியோ.. டாக்டரை தட்டி தூக்கிய போலீஸ்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பெண் ஊழியரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் குருசாமி வயது 50. இவர் அங்கு பணிபுரியும் இளம் பெண் ஒருவருடன் மருத்துவமனையில் காம விளையாட்டுக்களில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார்.

நீலவேணி
இந்நிலையில் அதே அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் நீலவேணி என்பவர், டாக்டர் குருசாமியின் அத்துமீறலை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஆஜராகி புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அரசு டாக்டர் குருசாமி பணியில் இருக்கும்போதே தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும், மேலும் தன்னுடன் பணிபுரியும் சில பெண்களிடம் மருத்துவமனையில் வைத்தே மசாஜ் உள்ளிட்ட சில்மிஷ விளையாட்டுகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் அளித்தார்.

வீடியோ பதிவு செய்த காரணம்
அதனை வீடியோ பதிவு செய்த காரணத்துக்காக தன்னுடைய மொபைல் போனை கைப்பற்றி வைத்துள்ளதாகவும் தன்னை தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் நீலவேணி தெரிவித்திருந்தார். இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குருசாமி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சக பணியாளர்கள்
டாக்டர் குருசாமியின் லீலைகள் பற்றி போலீசார் கூறுகையில், சக பணியாளர்கள் செல்போன் எண்களை எடுத்து அவர்களுக்கு தனியாக மெசேஜ் அனுப்புவதை டாக்டர் குருசாமி வழக்கமாக வைத்து இருந்துள்ளார். குறிப்பிட்ட சில பெண்களின் செல்போன் எண்ணுக்கு அவரது உடை மற்றும் உடல் அமைப்பு குறித்து தகவல்களை முதலில் அனுப்புவார். இதற்கு அந்த பெண்கள் அனுப்பும் பதிலை வைத்து அடுத்தக்கட்ட மெசேஜ்களை அனுப்புவார்.

தவறாக அனுப்பிட்டேன்
டாக்டர் குருசாமி மெசேஜ்களுக்கு பெண்கள் ஆட்சேபனை தெரிவித்தால், "சாரி, ராங் போஸ்ட்.
தவறாக அனுப்பி விட்டேன்"என்று தகவல் போட்டுவிட்டேன் என கூறி அதே மெசேஜை அடுத்த பெண்ணின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுபோன்று தினமும் பல பெண்களுக்கு டாக்டர் குருசாமி மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications