ஆளுநரை பொன்முடி இழிவாக பேசியிருக்கிறார்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.. நடிகை குஷ்பு காட்டம்!
தூத்துக்குடி: சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.. மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா? என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார்.
இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் இடம் பெறாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

ஆளுநர் வெளிநடப்பு செய்தபோது
சட்டசபையில் இருந்து கவர்னர் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக ஆளுநர் அரசியல் சாசன மாண்புகளை மீறும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், ஆளுநர் விதியை மீறும் வகையில் செயல்படவில்லை என தமிழக பாஜக கூறி வருகிறது. இதனிடையே ஆளுநர் வெளிநடப்பு செய்த போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரை நோக்கி ஆவேசமாக கையை அசைத்தபடி சொல்வது போன்ற வீடியோ பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

பொன்முடியின் செயல் இழிவானது
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள
தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் துத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொன்முடியின் செயல் இழிவானது எனவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக குஷ்பு அளித்த பேட்டி வருமாறு:-

ஈசாவுக்கு என்று ஒரு சட்டம்
தூத்துக்குடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவது போல் செயல்படுகிறார். தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை என்றார். ஈஷா மையத்தில் சுபஸ்ரீ உயிரிழந்துள்ளார். முறையாக விசாரணை நடத்த வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம்.. ஈசாவுக்கு என்று ஒரு சட்டம் நமக்கு என்று ஒரு சட்டம் எதுவும் கிடையாது முறையாக விசாரணை நடைபெற வேண்டும்.

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.. மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பினார். நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது குறித்து மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அனைவரும் ஒன்றிணைந்து அது குறித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications