தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆசையாய் வாங்கி வந்த ‘ஜூஸ்’ மயங்கி சரிந்த 'லெட்சுமிபிரியா' உயிருக்கு போராடும் ‘சாந்தி’! என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேபழச்சாறு குடித்த மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது தாயாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் பாரதிநகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கடம்பூர் சாலையில் ஹோட்டல் வைத்து தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி சாந்தி.

இவர்களது மகளான 15 வயதான லெட்சுமிபிரியா, தாழையூத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

 13 பேரை பலி கொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- 17 போலீஸ் மீது உடனே நடவடிக்கை எடுங்க..சீமான் 13 பேரை பலி கொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- 17 போலீஸ் மீது உடனே நடவடிக்கை எடுங்க..சீமான்

ஜூஸ் பார்சல்

ஜூஸ் பார்சல்

இந்நிலையில் மகாலிங்கத்தின் மனைவி சாந்தி கடந்த 11ஆம் தேதி கீழபஜாரில் பழக்கடை ஒன்றில் பழரசம் வாங்கி பார்சல் வாங்கி வீட்டில் வைத்து சாந்தி, லட்சுமிபிரியா குடித்துள்ளதாக கூறப்படுகிறது. மாலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருவரும் கயத்தாறிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின்னர் 13 மற்றும் 14ஆம் தேதி கோவில்பட்டி தனியார் மருத்துவமனையிலும், 15 மற்றும்16 தேதிகளில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்டது.

மகள் பலி

மகள் பலி

பின்னர் 17ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக 2 ஆம்புலன்ஸ்களில் சென்னை அப்பல்லோ செல்லும் போது லட்சுமிபிரியா இறந்தார். அதன்பின்னர் 2 ஆம்புலன்ஸ் திரும்பிவந்தது. சாந்தி நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த லட்சுமிபிரியா உடல் பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பழரசத்தில்

பழரசத்தில்

இந்த நிலையில் தாய், மகள் வாங்கி கொடுத்த பழரசத்தில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், லட்சுமிபிரியா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கயத்தார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்குபதிவு செய்யப்படும் எனவும், சட்டரீதியான நடவவடிக்கைகள் எடுக்கப்படும் உறுதியளித்தனர், அதனை ஏற்றுக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் தந்தை மகாலிங்கம் கூறுகையில்," தனது மனைவி, மகள் இருவரும் வாங்கி அருந்திய பழரசத்தில் விஷம் கலந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், தனது மனைவி,மகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலில் விஷம் கலந்து இருந்து இருந்தாக கூறியுதாகவும், எனவே தங்களுக்கு சந்தேகம் இருப்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம், போலீசார் சரியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக" தெரிவித்தார்.

English summary
While the death of a student after drinking fruit juice near Kovilpatti in Thoothukudi district has caused shock, her mother is being treated at the hospital in a life-threatening condition ; தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேபழச்சாறு குடித்த மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது தாயாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X