ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் அலட்சியம் - அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடக்கம் முதலே மிக அலட்சியமாக அணுகியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார் எனவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Recommended Video
தூத்துக்குடியில் இயங்கி வந்த காப்பர் உருக்கு ஆலையால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். தேசியளவில் கவனம் ஈர்த்த இந்த போராட்டத்தின் 100 வது நாளான மே 22 2018 அன்று ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2 பெண்கள் 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது நாட்டையே அதிர வைத்தது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம்
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஜூன் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் உறவினர்கள், போராட்டக்குழுவினர், தூத்துக்குடி மக்கள், நேரடி சாட்சிகள், மறைமுக சாட்சிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4 ஆண்டுகள் விசாரணை
பல்வேறு கால நீட்டிப்புகளை கடந்த சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணை நிறைவடைந்ததை அடுத்து கடந்த மே 18ஆம் தேதியன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை; எந்த ஒரு போலீசாரும் காயமும் அடையவில்லை. பொதுமக்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாத போதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

குருவிகளைப் போல சுட்டனர்
அதுவும் கலைந்து ஓடிய போராட்டக்காரர்களை குறிவைத்தும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சில போலீசார் ஒளிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை குருவிகளைப் போல போலீசார் சுட்டுக் கொன்றனர். போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் எந்த திசையில் இருந்து வருகிறது என்றே தெரியாமல் போராட்டக்காரரர்கள் சிதறி ஓடினர். போலீசாரின் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது குரூரமான செயல்.
கொடூரமான தோல்வி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என என அறிக்கையில் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆட்சியர் வெங்கடேசன்
காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலட்சியம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடக்கம் முதலே மிக அலட்சியமாக அணுகிய அவர் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார் என்றும், வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications