கலப்புத் திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம்.. முதியோர், பெண்களுக்கு உதவி எண்கள் அறிமுகம்.. மத்திய அரசு
வேலூர் : வேலூரில் பெண்கள் மற்றும் முதியவர்கள் உதவி பெறும் வகையில் தொலைபேசி எண்களை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அறிமுகம் செய்து வைத்தார்.
சாதி, மதத்தை மறந்து கலப்புத் திருமணம் செய்வோருக்கு மத்திய அரசு 2.5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். முதியவர்கள் விழிப்புணர்வு உதவி எண் 14567, பெண்கள் விழிப்புணர்வு பெற உதவி எண் 181 வேலூரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

முதியோர் உதவி பெற 14567
வேலூர் மாவட்டத்தில் முதியவர்கள் விழிப்புணர்வு மற்றும் உதவி பெறுவதற்கான எண் 14567 மற்றும் பெண்கள் விழிப்புணர்வுக்காக 181 என்ற பிரத்யேக தொலைபேசி எண்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தொடங்கி வைத்தார். முதியவர்கள் 14567 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, ஓய்வூதியம், சட்டம் தொடர்பான சந்தேகங்கள், ஆதரவு போன்ற வழிகாட்டுதல்களை இலவசமாக பெற முடியும். இதுமட்டுமின்றி துஷ்பிரயோக பிரச்சினைகள் இருந்தாலும் இந்த உதவி மையத்தை நாடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெண்கள் உதவி பெற 181
அதேபோல 181 உதவி எண் மூலம் பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கவும், அரசின் திட்டங்கள், பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் உதவித் தொகை உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் பயன்படும். இத்திட்டங்களை வேலூர் மாவட்டத்தில் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முத்ரா யோஜனா திட்டத்தில் பயன்
தமிழ்நாட்டில் முத்ரா யோஜனா திட்டத்தில் 2015ம் ஆண்டு முதல் இதுநாள் வரை 3.60 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். 2016 முதல் இதுவரை 29 லட்சம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், அதேபோல் கிராமப்புறங்களில் 5.60 லட்சம் பேருக்கும், நகரங்களில் 4.42 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்றும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

சாதி மறுப்பு திருமணம் செய்தால் நிதி
மத்திய அரசு கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த தம்பதிக்கு 2.5 லட்சம் நிதி உதவி வழங்கி உதவி செய்வதாக குறிப்பிட்ட மத்திய இணை அமைச்சர், இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 1.75 லட்சம் கலப்புத் திருமணங்கள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார். சிறுபான்மையினருக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவதாக குறிப்பிட்ட ராம்தாஸ் அத்வாலே, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications