Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூருக்கு மகிழ்ச்சி.. குஷியில் பெங்களூர், தஞ்சாவூர், சென்னைவாசிகள்.. விரைவில் வரப்போகிறது அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

சிறு நகரங்களை இணைக்கும் சேவையின் பெயர்தான் உதான் திட்டம்.. உதான் என்றால் சாதாரண மக்களும் பறக்கலாம் என்று அர்த்தமாகும். இந்த திட்டத்தை சில வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடி துவக்கி வைத்திருந்தார்..

Vellore Excellent News and Vellore airport operations resume next month, says airport officials

உதான் திட்டம்: உதான் சேவை அளிக்கும் விமானங்கள் பொதுவாக 19 முதல் 78 நபர்கள் அமரக்கூடியதாக இருக்கும். 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் இந்த 2,500 ரூபாய் சலுகை அளிக்கப்படும்.

அந்தவகையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்து, கடந்த 2016ல், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஓடுதளம்: இந்த திட்டத்துக்காக, பொதுமக்களின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன. தார் வழி சாலையும் விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில், ஓடுதளம், டெர்மினல் உள்ளிட்டவை கட்டப்பட்டன.. அத்துடன், தளவாட கருவிகள், பயணிகள் காத்திருக்கும் அறை போன்றவையும் அமைக்கப்பட்டன. ஆனாலும் விரிவாக்கப் பணிகளுக்கு கூடுதலாக சுமார் 10 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதால், அனைத்து பணிகளுமே அப்படியே முடங்கிப்போய்விட்டன.

நேரம்தான் வீணானதே தவிர, 10 ஏக்கர் நிலம் கடைசிவரை கிடைக்கவேயில்லை.. அதனால், கையிலிருக்கும் இடத்தைக்கொண்டே, அடுத்தடுத்த ஏர்போர்ட் பணிகள் துரிதமாக நடந்து முடிந்தன.. இதையடுத்து, கடந்த மாதம் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், முதற்கட்ட சோதனையும் மேற்கொள்ளப்பட்டன.

விமான ஓடுபாதை: அந்தவகையில், டெல்லியில் இருந்து விமான போக்குவரத்து ஆணையத்திற்கு சொந்தமான விமானம் வரவழைக்கப்பட்டு வேலூர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் 5 முறை டேக் ஆஃப், டேக் ஆன் செய்யப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்படி தொடர்ந்து, 5 முறை தாழ்வாக விமானத்தை இயக்கி சோதனைகள் நடத்தியபோது, ஓடுதளப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பகல் வேளையிலும் சரியாக தெரிகிறதா? என்பது உட்பட பல்வேறு ஆய்வுகள் நேரடியாக நடத்தி முடிக்கப்பட்டன. பிறகு, ஓடுதள பாதையில் விமானத்தை இறக்கி சோதனை முயற்சியும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

வரப்பிரசாதம்: இப்போது, விமானம் இயக்குவதற்கான அனுமதிக்காக காத்திருப்பதாகவும், வரும் டிசம்பர் மாதத்தில் இந்த விமான சேவை துவங்கப்படும் என்றும் செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில், இதை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் இன்னொரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தஞ்சாவூரில் இருந்து சென்னை, பெங்களூருவிற்கு விமான சேவை ஆரம்பமாகிறது.
அதுபோலவே, நெய்வேலியில் இருந்தும் சென்னைக்கு சிறு ரக விமான சேவை துவங்கப்படுகிறது.. என்எல்சியில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்தே, இந்த விமானங்களை இயக்க போகிறார்களாம்..

குட்நியூஸ்: ஏர் டாக்ஸி நிறுவனமானது, வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விமான சேவையை வழங்க போவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சேவைகள் எல்லாமே உதான் திட்டத்தின்கீழ் தயாராகி உள்ளது.. இவை அனைத்துமே, அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரப்போகிறது.

இந்த உதான் திட்டத்தில் வேலூரில் ரூ.65 கோடியில் கட்டப்பட்டு தயாராகியிருக்கும், சிறிய விமான நிலையமும், சிவில் போக்குவரத்து விமான இயக்குநரகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறதாம். இந்த அனுமதி மட்டும் கிடைத்துவிட்டால், பெங்களூர் - சென்னை சென்று வருவதற்கான பயண நேரம் 4 மணி நேரமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வேலூர் மாவட்டத்துக்கே மிகப்பெரிய வரப்பிரசாதமாக இந்த விமான சேவை திகழும் என்றும் நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+