திருப்பதி: கல்வீசித் தாக்கிய செம்மரக்கடத்தல் கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு... - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் வாரி மெட்டு மலையடிவாரத்தில் செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செம்மரக்கட்டைகளைக் கடத்திய கும்பல் ஒன்று, போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கடத்தல் கும்பலை சரணடையும்படி எச்சரித்த போலீசார், 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், செம்மரக்கட்டைகளை அப்படியே போட்டுவிட்டு கடத்தல் கும்பல் தப்பியோடியது. அவர்களை விரட்டிச் சென்ற போலீசார், ஒருவரை மட்டும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Tirupati forest area the red sandalwood anti smuggling police force have made a shoot out at smugglers and arrested one person.
Please Wait while comments are loading...