ஆடியோ தனி.. வீடியோ தனியாக பிரசாரம் செய்த விஜயகாந்த்.. தேர்தல் கள சுவாரசியங்கள்.. டாப் 5 பீட்ஸில்!
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு எழும்பூர் தொகுதியில் தேமுதிக தலைவர் பிரசாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
தமிழ சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் களத்தில் நடக்கும் சுவாரசிய சம்பவங்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை கூறியிருக்கிறார்.
இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எழும்பூரில் பிரசாரம் செய்த தகவலையும் அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்ததும் அவர் ஏற்கனவே பேசிய ஆடியோ பிளே செய்யப்பட்ட தகவலையும் கூறியுள்ளார் பிகே.
நடிகை ஷகிலா அரசியல் காட்சியில் சேர்ந்ததும் அவருக்கு பதவி வழங்கப்பட்ட தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 3998 பேர் போட்டியிடுவது குறித்த தகவலையும் இதில் அதிகம் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.