வியாபாரிகளையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கணும்.. ஸ்டாலினுக்கு, விக்கிரமராஜா கோரிக்கை!
கள்ளக்குறிச்சி: வியாபாரிகளையும் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தையும் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வணிகர்சங்க பேரமைப்பின் 59-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட வணிகர்கள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்

விக்கிரமராஜா
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வியாபரிகள் குறித்தும் ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

ஆன்லைன் வர்த்த ஆதிக்கம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா கூறியதாவது:- கொரானா தடை காலத்தில் ஆன்லைன் வர்த்தகங்கள் பெருமளவில் முடுக்கி விடப்படுள்ளன. எங்கும் ஆன்லைன் வர்த்தகத்தின் ஆதிக்கமாக இருக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் நேரடி வியாபாரத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தடை விதிக்க வேண்டும்
ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தக விவகாரத்தில் கூடிய விரைவில் முடிவெடுக்க வேண்டும். எனவே பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஆன்லைன் வர்த்தகங்களுக்கு உடனடியாக தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும்.

முன் களப்பணியாளர்கள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் வியாபாரிகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கியுள்ளனர். எனவே வியாபாரிகளையும் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், கொரானா தொற்றுக்குள்ளாகி இறந்த வியாபாரிகளின் குடும்பத்தினருக்கு ரூ.10-லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.












Click it and Unblock the Notifications