மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் கோஷ்டி மோதலால் தள்ளிவைப்பு - வானூரில் திமுக வெற்றி
திமுகவைச் சேர்ந்த இருபிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மரக்காணம் ஒன்றியத்தலைவர் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: மரக்காணத்தில் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் கோஷ்டி மோதல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வானூர் ஒன்றியத்தில் தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவியதில் திமுகவின் பி.கே.டி.முரளி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
153 மாவட்ட கவுன்சிலர்கள், 1,420 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 23 ஆயிரத்து 185 கிராம பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 760 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் கடந்த 12ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் திமுக 139 மாவட்ட கவுன்சிலர்கள், 982 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் பதவியிடங்களை கைப்பற்றியது. பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 74 பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், துணைத்தலைவர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து துணை தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இப்பதவிகளுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள். இதில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தலை நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்த மறைமுக தேர்தலில் தலா 9 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், தலா 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், 2,890-க்கும்மேற்பட்ட கிராம ஊராட்சி மன்றதுணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தங்கள் பக்கம் கவுன்சிலர்களை இழுப்பதில் தீவிரம் காட்டினர். கவுன்சிலர்களாக வெற்றி பெற்றவர்களை சுற்றுலாதலங்களுக்கு அழைத்துச் சென்று கவனித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மொத்த எண்ணிக்கை 28 இதில் திமுக 26 இடங்களிலும் வி.சி.க 1 இடத்திலும் அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் மொத்தம் 293 இதில் பெரும்பாலான இடங்களில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத் தலைவர் தேர்தலில் திமுகவிலேயே இரண்டு தரப்பினர் போட்டியிடுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒன்றியத்தில் மொத்தம் 26 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் திமுக 18, விசிக 1, அதிமுக 3, பாமக 2, சுயேச்சைகள் 3 என ஒன்றியக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது.
மரக்காணம் ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுக ஒன்றியச் செயலாளர் தயாளன் வேட்பாளராக உள்ள நிலையில், திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் நல்லூர் கண்ணனும் ஒன்றிய தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இதனால் திமுகவைச் சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் காரணமாக மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு கட்சி தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தவருக்கு தான் ஓட்டுபோட வேண்டும் என்றும், இதை மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரித்துள்ளார். ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் களத்தில் நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போல வானூர் ஒன்றியத்தை பொறுத்தவரை 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 10 இடங்களிலும், அதிமுக 11 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, சுயேச்சை தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தலைவர் பதவியை பிடிக்க 14 கவுன்சிலர்கள் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திமுகவுக்கு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் 12 கவுன்சிலர்கள் உள்ளனர். எனவே பாமக சுயேச்சை கவுன்சிலர்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்களோ அவர்களே வெற்றி பெறும் நிலை உள்ளது. இதனால் சுயேச்சை கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக, அதிமுகவினர் போட்டி போட்டனர். இந்த நிலையில் வானூர் ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தலில் திமுகவின் பி.கே.டி.முரளி தேர்வு செய்யப்பட்டார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications