விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆப்கனுடன் வணிகம் செய்த பண்டை தமிழர்கள்.. வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த புதிய ஆதாரங்கள்! அடடே

Google Oneindia Tamil News

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் நமக்கு இப்போது கிடைத்துள்ள கார்னீலியன் மணிகள் ஆப்கானிஸ்தானுடனான நமது வர்த்தக தொடர்பு பற்றிய புது தகவல்களைக் கண்டறிய உதவுவதாக உள்ளது.

உலகிலேயே மிகவும் தொன்மையான நாகரீகங்களில் ஒன்றாகத் தமிழர் நாகரீகம் இருக்கிறது. பழந்தமிழர்கள் குறித்து ஆய்வு செய்ய அரசு இப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தாண்டு கீழடி, கங்கைகொண்ட சோழபுரம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட 7 இடங்களில் புதிதாக அகழாய்வு பணிகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

 ஆப்கன்

ஆப்கன்

அதன்படி வைப்பாற்றின் கரையோரம் வடக்கே அமைந்த வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. இதனிடையே அங்கு கண்டறியப்பட்டுள்ள கார்னீலியன் மணிகள் ஆப்கானிஸ்தானுடனான நமது வர்த்தக தொடர்பு பற்றிய புது தகவல்களைக் கண்டறிய உதவுவதாக உள்ளது. இந்த கார்னீலியன் மணிகள் பொதுவாக ஆப்கானிஸ்தானில் தான் கண்டறியப்படும்.

 கார்னீலியன் மணிகள்

கார்னீலியன் மணிகள்

அங்கிருந்து இதை இறக்குமதி செய்து வளையல்களை அலங்கரிக்கப் பயன்படுத்தி இருக்கலாம் என்று வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் இங்கு தான் வளையல்கள் அதிகம் செய்யப்பட்டன. இங்குக் கண்டறியப்பட்ட செப்பு நாணயங்களும் ஆப்கன் உடனான வர்த்தகத்திற்கு அடையாளமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 வணிக முத்திரை

வணிக முத்திரை

அவர் மேலும் கூறுகையில், "அந்த இடத்தில் இருந்து பல வணிக முத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில முத்திரைகளில் வெறும் ஒரு புள்ளியும், சில முத்திரையில் ஆறு புள்ளிகளும், சிலவற்றில் குறிப்பிட்ட டிசைன்களும் உள்ளன. இப்படி பல்வேறு முத்திரைகள் இருப்பதால், அங்கு வெவ்வேறு குழுக்கள் வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு முத்திரைகள் இருந்திருக்கலாம்.

அகழாய்வு

அகழாய்வு

இங்குக் கண்டறியப்பட்டுள்ள வளையல்கள் பல்வேறு நிலைகளில் கண்டறியப்பட்டு உள்ளன. அதாவது வளையங்களில் அலங்கார வேலைகள் மட்டுமே இங்கு நடந்து உள்ளன. முழு வளையல் இங்கே செய்யப்படவில்லை. மணிகள் வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இருக்கலாம். அதேபோல வளையல் தயாரிக்கும் பணிகளும் வேறு இடத்தில் நடந்து இருக்கலாம். நல்ல வளையல்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், மற்ற உடைந்த வளையல்கள் தான் அகழ்வில் மீட்கப்பட்டு இருக்கிறது.

நிறங்கள்

நிறங்கள்

வளையல்களின் அலங்கார வேலைகள் கையால் செய்யப்பட்டு உள்ளன. இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள் மூலம் சில வளையல்களுக்குச் சிவப்பு வண்ணம் பூசப்பட்டது. அவர்கள் இந்தளவுக்குத் துல்லியமாகச் செய்ய நிறையப் பொறுமை தேவை. கவனமாக அதைச் செய்துள்ளனர். தூத்துக்குடியில் இவை சேகரிக்கப்பட்டு, வேறு ஒரு இடத்தில் வளையலாக மாற்றப்பட்டு, கடைசியில் அலங்காரப்படுத்தவே அங்கு எடுத்து வரப்பட்டு இருக்கிறது.

 தங்கத் தோடு

தங்கத் தோடு

அதேபோல இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற பொருட்களை வைத்துப் பார்க்கும் போது, அவர்கள் ஓய்வு நேரத்தில் பாண்டி உள்ளிட்ட விளையாட்டுகளை மக்கள் விளையாடி உள்ளது தெரிகிறது. 16 இடங்களில் தீ மூலம் எதோ செய்துள்ளதற்கான சான்றும் கிடைத்து உள்ளது. மேலும், மூன்று தந்தம் பதக்கங்கள் மற்றும் ஒரு தங்கத் தோடும் கண்டறியப்பட்டு உள்ளது. இதைப் பணக்காரர் அணிந்து இருப்பார்கள்

 என்ன காலம்

என்ன காலம்

இதன் மூலம் செல்வந்தர்களே இந்தப் பகுதியில் வாழ்ந்து உள்ளதும் தெரிகிறது. அதேநேரம் இவை எல்லாம் எந்த காலத்தைச் சேர்ந்தது என்று இப்போது நம்மால் துல்லியமாகச் சொல்ல முடியாது. கார்பன் டேட்டிங் செய்த பின்னரே கலைப்பொருட்கள் காலத்தைச் சரியாகக் கூற முடியும்" என்று அவர் தெரிவித்தார். இந்த இடத்தில் கண்டறியப்பட்ட பொருட்களில் சுமார் 60% ஷெல் வளையல்களாக இருந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 3,254 பழங்கால பொருட்கள்

3,254 பழங்கால பொருட்கள்

இந்த அகழாய்வை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மார்ச் 16இல் தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வு செப்டம்பர் 30ஆம் தேதி தேதி நிறைவடைந்தது. இந்த ஆய்வில் மொத்தம் 16 அகழிகள் தோண்டப்பட்டது. இதில் மொத்தம் 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் 60 சதவீதம் தொல்பொருள்கள் ஷெல் வளையல்களாக இருந்த நிலையில், மணிகள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உருவங்களைக் கொண்ட வணிக சின்னங்களும் பழங்கால தந்தம் பதக்கங்கள் கண்டறியப்பட்டது.

English summary
Afghanistan's carnelian beads found in Vembakottai excavation: Vembakottai excavation latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X