Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோட்டார் ரூமில் 3வது மனைவி! டார்ச் லைட் டார்ச்சர்..துடித்து மடிந்த ஏசுராணி! விருதுநகர் விபரீத சைக்கோ

Subscribe to Oneindia Tamil

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மது போதையில் உடலுறவு கொண்ட மனைவி காலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. டார்ச் லைட்டால் டார்ச்சர் செய்த கணவனை காவல்துறையினர் தற்போது கைது செய்திருக்கின்றனர்.

மது போதையில் கொலை சம்பவங்களும் கொள்ளை சம்பவங்களும் தற்போது அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி வருகிறது. கணவன் மனைவி கூட ஒன்றாக மது அருந்துவதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அளவுக்கு அதிக மது போதையுடன் உடலுறவு கொள்ளும் போது மாரடைப்பு வருவதற்கான சாத்திய கூறுகள் கூட இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரித்திருக்கின்றனர். மேலும் மது போதையில் இயற்கைக்கு மாறாக உறவு கொண்டு கொலை வரை செல்லும் நிகழ்வுகளும் அரங்கேற தான் செய்கிறது.

கொடூர சம்பவம்

கொடூர சம்பவம்

அப்படி ஒரு கொடூர சம்பவம் தான் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் அரங்கேறி அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. உடலுறவின்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறிய மூன்றாவது மனைவியை டார்ச் லைட்டால் டார்ச்சர் செய்து கொலை செய்திருக்கிறார் விபரீத சைக்கோ. தற்போது விருதுநகர் போலீசார் அவரை கம்பி எண்ண வைத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அத்தி கோயில் என்ற பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

மனைவிகளிடம் டார்ச்சர்

மனைவிகளிடம் டார்ச்சர்

அங்கு சங்கர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று இருக்கிறது அந்த தோட்டத்தில் தான் காவலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார் 50 வயதான வனம் என்ற வனராஜ். மது போதைக்கு அடிமையான வனராஜ் இரவு நேரங்களில் மனைவியை இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முதல் மனைவி கோபித்து சென்றிருக்கிறார். இதை அடுத்து இரண்டாவது திருமணம் செய்த மனைவியிடமும் தனது சைக்கோ புத்தியை காட்டியதால் அவரும் வனராஜாவை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

2வது மனைவி

2வது மனைவி

இந்த நிலையில் கணவரை பிரிந்து இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த இயேசு ராணி என்ற 28 வயது பெண்ணை மூன்றாவதாக மணமுடித்து வாழ்ந்து வந்திருக்கிறார் வனராஜ். தான் காவலாளியாக பணிபுரியும் தோட்டத்திலேயே குடும்பத்துடன் அவர் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு யேசுராணியின் இரு குழந்தைகளும் தூங்கிய நிலையில் தோட்டத்தில் உள்ள மோட்டார் ரூமுக்கு வனராஜ் மற்றும் அவரது மனைவி யேசு ராணி சென்று தூங்கி இருக்கின்றனர். காலையில் இயேசு ராணி உடல் முழுவதும் ரத்த காயங்களுடனும் ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்து கிடந்திருக்கிறார்.

மதுபோதையில் டார்ச்சர்

மதுபோதையில் டார்ச்சர்

இதனால் பயந்து போன வனராஜ் தனது மனைவி இறந்தது குறித்து யாருக்கும் சொல்லாமல் அங்கேயே அமர்ந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து தனது தாய் எங்கே என இயேசு ராணியின் மகள்கள் கேட்ட நிலையில் தோட்டத்து அறையில் அவர் உயிரிழந்து கிடப்பதாக கூறிய வனராஜ் தொடர்ந்து காவல்துறையினருக்கும் தகவல் அளித்திருக்கிறார். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் யேசு ராணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வனராஜை தனியே அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

டார்ச்சர் செய்து கொலை

டார்ச்சர் செய்து கொலை

அப்போதுதான் வனராஜ் உடலுறவின் போது தனது மனைவியை டார்ச்சர் செய்து கொன்றதும் அவர் ஒரு விபரீத சைக்கோ என்பது தெரிய வந்திருக்கிறது. நேற்று இரவு தோட்டத்து அறையில் ஒன்றாக தங்கி இருந்த வனராஜும் இயேசு ராணியும் ஒன்றாக மது அருந்தி இருக்கின்றனர். இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் வனராஜ் டார்ச்சர் செய்ய தொடங்கியதால் தான் தனது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என இயேசு ராணி கூறியிருக்கிறார். ஆனாலும் அவரை விடாத வனராஜ் தொடர்ந்து அவரை உடல் ரீதியாக டார்ச்சர் செய்துள்ளார்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

மேலும் தான் வைத்திருந்த டார்ச் லைட்டை அவரது பிறப்புறுப்பில் வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால் இயேசு ராணி இறந்ததும் அதைத்தொடர்ந்து காவல்துறைக்கு அவர் தகவல் தெரிவித்ததும் தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் வனராஜ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+