விருதுநகரில் பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு?.. இரு சிசுக்களும் இறந்த சோகம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடும் வயிற்றுவலி காரணமாகக் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த நிலையில், அவரது வயிற்றிலிருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள உணவுப் பிரியர்களின் விருப்பமான உணவாக பரோட்டா உள்ளது. சாலையோர கையேந்தி பவன்களில் இருந்து ஸ்டார் ஓட்டல்கள் வரை பரோட்டா இல்லாத சைவ,அசைவ உணவகங்களை காண்பதே அரிது, பரோட்டோவிலும் சாதா பரோட்டா, முட்டை, கொத்து, வீச்சு, பன் என ஏராளமான வகை பரோட்டாக்களை கண்டுபிடித்து உண்டு வருகின்றனர் ஃபுட்டீக்கள்.
அதே நேரத்தில் கலோரிகள் அதிகம் உள்ள பரோட்டாவை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். சில நேரங்களில் பரோட்டா சாப்பிட்டவர் மரணம் என்ற செய்திகள் அடிக்கடி வந்தாலும் பரோட்டா பிரியர்கள் விடுவதாக இல்லை. பரோட்டா சாப்பிட்டவர்கள் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் , திடீரென இந்த வகையான நிகழ்வுகள் அதிக முக்கியத்துவம் பெற்று விடுகின்றன.

பரோட்டா மரணங்கள்
ஏற்கனவே கமுதி அச்சங்கோவில் பாண்டி, கடலூரில் வடமாநில தொழிலாளி, கொரட்டூரில் கல்லூரி மாணவர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மில் பெண் தொழிலாளி, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமோதரன் ஆகியோர் பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் பரோட்டாவுக்கு பெயர் பெற்ற விருதுநகரிலேயே நடைபெற்றுள்ளது. அதிலும் உயிரிழந்தவர் ஒரு கர்ப்பிணிப் பெண் என்பது கூடுதல் அதிர்ச்சி.

கர்ப்பிணிப்பெண்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அருகே அமைந்துள்ளது வதுவார்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் அனந்தாயி. இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கூடுதல் கவனம் செலுத்தி அவரது கணவர் அனந்தாயியை கவனித்து வந்துள்ளார். அனந்தாயிக்கு அடிக்கடி பரோட்டா சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. அங்குள்ள சாலையோர கடை ஒன்றிலிருந்து அடிக்கடி அவரது கணவர் பரோட்டா வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பரோட்டா சாப்பிட்ட நிலையில் மரணம்
இந்நிலையில் அனந்தாயிக்கு பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்ததால் சாலையோரம் உள்ள கடையில் அவரது கணவர் வாங்கிக் கொடுத்த பரோட்டாவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அத்துடன் அவரது வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை
இதையடுத்து அவரது உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர்களின் முழுமையான அறிக்கைக்கு பிறகே மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவரும் என்றும், பரோட்டா சாப்பிட்டதால் ஃபுட்பாய்சன் ஆகி அவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றிலிருந்த இரு சிசுக்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுவாகவே பெண்கள் கருவுற்ற பின்னர், உணவுகளைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் . பழங்கள் காய்கறிகள் சத்துக்கள் நிறைந்த உணவுகளையே சாப்பிட வேண்டும் என பெரியவர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்துவர். கனமான உணவுகளை உண்பதால் பல்வேறு உபாதைகள் ஏற்படும்.. சில நேரங்களில் சிசுவுக்கோ அல்லது தாய்க்கோ அது ஆபத்தாகிவிடலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications