மனைவியுடன் காரில் சென்ற பாஜக நிர்வாகி.. எதிரே வந்த லாரி! ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோர விபத்தில் பலி
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் கதிரேச பாண்டியன். பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

இவர் தனது மனைவி ராமலெட்சுமியுடன் சொந்த ஊரான ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் இவரது கார் சென்றுகொண்டிருந்தது.
அதே வழியாக தேனியில் இருந்து ராஜபாளையம் நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த லாரி இவரது காருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் பாஜக நிர்வாகி கதிரேசப்பாண்டியனும் அவரது மனைவி ராமலட்சுமியும் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்தை கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு வரவழைத்தனர். காயமடைந்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பாஜக நிர்வாகி கதிரேசப்பாண்டியன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த அவரது மனைவி ராமலட்சுமி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் கதிரேசப்பாண்டியன் கவனக்குறைவு காரணமாக காரை ஓட்டி வந்து லாரியின் மீது மோதினார் என தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications