ஆளவிடுங்கடா சாமி.. சீனாவில் ஓடி ஒளியும் முதியவர்கள்.. கொரோனாவுக்கு நடுவே ஒரே பரபரப்பு.. என்னாச்சு?
வாஷிங்டன்: சீனாவில் கொரோனா பரவல் என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வைரஸ் பரவல் உள்ளதால் சீன அதிபர் ஜி ஜின்பிங் விழிபிதுங்கி உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார். இந்நிலையில் தான் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் சீனாவின் அரசு அதிகாரிகளை பார்த்துவிட்டு கையெடுத்து கும்பிட்டபடி ஓடி ஒளியும் சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது ஏன்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
2019 இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கிளம்பியது. சுமார் 200 நாடுகளுக்கு வேகமாக பரவிய இந்த வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.
ஒட்டுமொத்த உலகமும் ஊரடங்கால் முடங்கியது. மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சரிந்த நிலையில் தான் தற்போது சீனா, பிரான்ஸ், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சீனாவில் கொரோனா பரவல்
குறிப்பாக சீனாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு உள்ளது. அங்கு ஓமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ்கள் பெரும் தாக்குதலை நடத்தி வருகின்றன. பிஎப் 7 உள்பட 4 வகையான உருமாறிய கொரோனா வைரஸால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. தினசரி பாதிப்பு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கும் நிலையில் அதுபற்றிய விபரங்களை வெளியிடாமல் சீனா மறைக்கிறது.

தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்
மேலும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதை அறிந்த அந்நாட்டின் அரசு 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. நீண்டகாலமாக இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து ஜீரோ கோவிட் பாலிசி கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மக்கள் அதிகமாக வெளியே நடமாட தொடங்கிய நிலையில் தற்போது கொரோனா பரவல் உச்சம் தொட்டு, பலிகள் அதிகரித்து வருகிறது. சீனாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதற்கிடையே தான் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அடுத்த மாதம் முதல் சீனா தனது எல்லைகளையும் திறந்து விடுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய பிரச்சனையை சந்திக்கும் சீனா
இது ஒருபுறம் இருக்கும் நிலையில் சீனாவில் கொரோனா தடுப்புக்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. வீடு, வீடாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தான் சீனா இன்னொரு பிரச்சனையை சந்தித்து வருகிறது. அதாவது சீனாவில் அதிகளவில் முதியவர்கள் உள்ள நிலையில் அவர்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். ஏனென்றால் கொரோனா தடுப்பூசி செலுத்தினாலும் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தடுப்பூசி செலுத்தாமல் தவிர்க்கின்றனர். இவ்வாறு இருப்பதன் மூலம் பலரும் எளிதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.

வீட்டை விட்டு ஓடும் முதியவர்கள்
இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக வீடு வீடாக சென்று 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அதிகாரிகள் வீடுகளுக்கு வரும்போது முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பயந்து அவர்கள் அதிகாரிகளை பார்த்து ஓட்டம் பிடித்து வருகின்றனர். இதனால் கொரோனா பரவலுக்கு நடுவே சீனா முதியவர்களால் இன்னொரு பிரச்சனையை சந்தித்து வருகிறது. இருப்பினும் கூட பல முதியவர்கள் உயிருக்கு பயந்து கொரோனா தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். இருப்பினும் கூட சர்க்கரை நோய் உள்பட பல்வேறு இணை நோய்களால் அவர்களால் தடுப்பூசியை எடுத்து கொள்ள முடியாத சூழலும் சீனாவில் நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் அச்சம்
இருப்பினும் கூட சீனாவில் குறையாத கொரோனா பரவல், கட்டுப்பாடு தளர்வு, அங்கு செலுத்தப்படும் தடுப்பூசியின் செயல் திறன் குறைவு உள்ளிட்டவை பிற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. முந்தைய காலத்தை விட சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுமா? என்ற கேள்வியே இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளன. அதன்படி இந்தியா, மலேசியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

40 நாள் முக்கியம்
மேலும் சீனாவின் அண்டை நாடாக இந்தியா உள்ள நிலையில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியமாகும். இந்தியாவிலும் ஜனவரியில் கொரோனா பரவல் என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதோடு அதற்கேற்ப கொரோனா தடுப்பு பணி மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications