வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹலோ, புடின்.. நான் பைடன் பேசறேன்.. நீங்க பண்றது எல்லாம் தப்புங்க.. அமெரிக்க ரஷ்ய அதிபர்கள் உரையாடல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பைடன், பதவியேற்ற பின் முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுடன் நேற்று பேசுகையில், பாதுகாப்பு, தேர்தல் தலையீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். இதையடுத்து அமெரிக்காவின் 46ஆவது அதிபராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்றது முதலே பைடன், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். மேலும், உலகின் முக்கிய நாட்டுத் தலைவர்களுடனும் தொலைப்பேசி வாயிலாக உரையாடி வருகிறார். இதுவரை கனடா மற்றும் பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களுடன் அவர் உரையாடியுள்ளார்.

பைடன் - புடின் பேச்சு

பைடன் - புடின் பேச்சு

இந்நிலையில், பதவியேற்ற பின் முதல்முறையாக பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுடன் நேற்று தொலைப்பேசி வழியாகப் பேசினார். இந்த உரையாடல் குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர் பைடனுக்கு ரஷ்யா சார்பில் புடின் வாழ்த்து தெரிவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பேச்சு தொடர்பான கூடுதல் விவரங்களை அமெரிக்கா தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்காவின் சோலர் வின்ட்ஸ் நிறுவனம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, ஆப்கானிலுள்ள அமெரிக்க வீரர்களை ரஷ்யா குறிவைத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்துள்ளனர். அப்போது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் புடின் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

அலெக்ஸி நாவல்னி

அலெக்ஸி நாவல்னி

ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளவர் அலெக்ஸி நாவல்னி. அந்நாட்டு அதிபர் புடினை தொடர்ந்து விமர்சித்து வரும் இவர், கடந்த வாரம்தான் ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பினார். நாடு திரும்பிய உடனேயே அவரை ரஷ்யா காவல் துறை கைது செய்தது. அலெக்ஸி நாவல்னியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் பைடன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அணு ஆயுத ஒப்பந்தம்

அணு ஆயுத ஒப்பந்தம்

மேலும், உக்ரைன் நாட்டின் இறையாண்மைக்கு அமெரிக்கா என்றும் மதிப்பளிக்கும் என்றும் ரஷ்யாவும் உக்ரைனை முறையாக நடத்த வேண்டும் என்றும் ரஷ்யத் தரப்புக்கு பைடன் வலியுறுத்தினார். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

டிரம்பும் பைடனும்

டிரம்பும் பைடனும்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், ரஷ்யாவுக்கு எதிராக மென்மையான அணுகு முறையையே கையாண்டார். சீனாவையே தொடர்ந்து அட்டாக் செய்த டிரம்ப், ரஷ்யாவிடம் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். ஆனால், புடின் போன்ற ஒரு சர்வாதிகாரிக்கு எதிராக எப்போதும் தான் கடுமையான முடிவுகளையே எடுப்பேன் என்று பைடன் தொடக்கம் முதலே கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

English summary
President Joe Biden on Tuesday spoke with Russian President Vladimir Putin on the phone for the first time since his inauguration, raising a number of topics of concern for the US, according to a readout of the call from the White House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X