கம்ப்யூட்டர் மவுஸ், காபி மெஷினில் குரங்கு அம்மை வைரஸ் இருக்கலாம்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவு!
வாஷிங்டன்: உலக நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை வைரஸ் கம்ப்யூட்டர் மவுஸ், காபி மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களிலுன் வழியாகவும் பரவும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Recommended Video
கொரோனாவை போல் மிகப்பெரிய அளவில் பரவவில்லை என்றாலும், குரங்கு அம்மை நோயும் உலக நாடுகளில் அமைதியாக பரவிக்கொண்டு தான் இருக்கிறது.
மிக தீவிரமாக பரவும் தன்மை இல்லை என்று ஒரு புறம் சொல்லப்பட்டாலும் உலக நாடுகள் முதல் மாநில அரசுகள் வரை அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறது.

20 சதவீதம் அதிகமாகும்
காற்றின் மூலம் பரவாது என்றும் தொடுதல் மூலமாகவே பரவும் இந்த நோய் இதுவரை 92 நாடுகளில் பரவி உள்ளது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரத்து 500 புதிய பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தை ஒப்பிடும் போது அதை விட 20 சதவீதம் அதிகமாகும். இதனால் உலகம் முழுவதும் கொரோனாவை போல் குரங்கு அம்மையும் பரவ தொடங்கியுள்ளதோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆய்வில் தகவல்
இவ்வாறு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை வைரஸ் நோய், வீட்டு உபயோக பொருட்களில் தங்கியிருக்கக்கூடும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கு அம்மை நோயால் பாதித்த இரண்டு நோயாளிகள், நாங்கள் எப்போதும் கைகளை சுத்தமாக வைத்திருப்போம். மேற்பரப்புகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிடுவோம் என்று கூறியிருந்தனர்.

வீட்டு உபயோக பொருட்களில்..
ஆனால், குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டு 20 நாட்கள் கழித்து, பாதிக்கப்பட்ட நபர்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் அதாவது இருக்கைகள், போர்வைகள், காஃபி மெஷின்ஸ், கம்ப்யூட்டர் மவுஸ் மற்றும் லைட் ஸிவிட்ச் உள்பட வீட்டு உபயோக பொருட்களிலும், இடங்களிலும் குரங்கு அம்மை வைரஸ் இருப்பதை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு ஆய்வறிக்கை கூறியுள்ளது. எனினும், 'லைவ் வைரஸ்' எந்த ஒரு பொருட்களிலும் மேற்பரப்பிலும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

நாய்களுக்கும் குரங்கு அம்மை
இது குறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு கூறுகையில், ''வீட்டின் மேற்பரப்புகள் மற்றும் பொருட்களை கிருமி நாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் பாதிப்பு ஏற்படுவதில் இருக்கும் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கு அம்மை நோய் பாதித்தவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இத்தாலியில் தம்பதி ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருந்த நிலையில், அவர்களுடன் இருந்த நாய்க்கும் குரங்கு அம்மை பரவியதாக லான்செட் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications