கொரோனா வைரசை நினைவில் வைக்கும் உடல் எதிர்ப்பு சக்தி: பூஸ்டர் டோஸ் இல்லாவிட்டாலும் கவலையில்லை
வாஷிங்டன்: கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் காலப்போக்கில் குறைந்து வருகின்றன, என்றபோதிலும், பூஸ்டர்கள் தேவை கிடையாதாம். ஏனென்றால் மனித உடல் பேக்-அப் பிளான் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்கிறது என்று, எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிய பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இது கண்டிப்பாக மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இந்த பல்கலைக்கழகத்தின் பெரல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் 61 பேரிடம், ஆறு மாதங்களுக்கு எம்ஆர்என்ஏ தடுப்பூசி செலுத்தி கண்காணித்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
தடுப்பூசி போட்டு சுமார் 5 மாதங்களான பிறகு, ஆன்டிபாடிகள் படிப்படியாக குறைவது வழக்கம். எனவேதான் உலக நாடுகள், பூஸ்டர் டோஸ்கள் செலுத்த திட்டமிட்டு வருகின்றன. ஆனால் பூஸ்டர்கள் செலுத்தினால் பிற நாடுகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசியே முழுமையாக சென்று சேராது என்று உலக சுகாதார அமைப்பு ஆதங்கம் தெரிவித்து வருகிறது.

நோய் எதிர்ப்பு நினைவு பெட்டகம்
இந்த நிலையில்தான், பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. அந்த ஆய்வில் கிடைத்துள்ள முக்கிய தகவல்கள் இவைதான்: கொரோனா தடுப்பூசி ஷாட்கள் SARS-CoV-2 க்கு நீடித்த நோயெதிர்ப்பு நினைவகத்தை B மற்றும் T செல்கள் வடிவில் உருவாக்குகிறது. எனவே கொரோனா தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்துவதை உடலில் பதிவாகும் இந்த செல் நினைவுகள் தடுக்கின்றன. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி கொரோனா வைரசை நினைவில் வைத்து போரிட்டு அழிக்கிறது.

ஆச்சரியம் ஆனால் உண்மை
"இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம்" என்கிறார், நோயெதிர்ப்பு நிறுவனத்தின் இயக்குநர் ஜான் வெர்ரி. மூன்றாம் டோஸ் அதாவது பூஸ்டர் டோஸ்கள், ஆன்டிபாடிகளை அதிகரிக்கவும், SARS-CoV-2 வைரசை தடுப்பதில் சிறந்ததுதான். இருப்பினும், உடலில் ஆன்டிபாடி அளவு குறையும் போது கூட கொரோனாவுக்கு எதிராக உடல் பாதுகாப்பு கவசமாக செயல்பட ஆரம்பிக்கிறது என்று ஜான் வெர்ரி கூறினார். ஆன்டிபாடிகள் குறைந்து, உங்களுக்கு சிறிது தொற்று ஏற்பட்டால், புதிய ஆன்டிபாடிகளை உருவாக்க, உடலில் நினைவக பி செல்கள் உள்ளன," என்றும் அவர் கூறினார்.

நோய் பரவல் தடுப்பு
மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளிப் பரப்புகளில் உள்ள ஆன்டிபாடிகள், கொரோனா வைரஸை அதன் நுழைவு வாயிலில் தடுத்து, தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. ஆனால், அங்குள்ள பாதுகாப்பு ஆன்டிபாடிகள் வலு குறைந்தால் தொற்றுநோய் பரவக் கூடும். ஆனால், புதிய ஆன்டிபாடிகள் தூண்டப்படும்போது அதுவும் அழிக்கப்படும்.
Recommended Video

தடுப்பூசியின் பலன்
மாடர்னா மற்றும் ஃபைசர் மற்றும் அதன் தொழில் கூட்டாளியான பயோஎன்டெக் எஸ்இ மூலம் தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசிகளால் உருவாக்கப்பட்ட மெமரி பி செல்கள், கொரோனா ஆல்பா, பீட்டா மற்றும் டெல்டா உள்ளிட்ட வைரஸ் வகைகளைத் தடுப்பதில் சிறப்பாகத் செயல்பட்டதை வெர்ரியின் குழு கண்டறிந்துள்ளது. கடுமையான கொரோனா பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதில் தடுப்பூசி ஏன் பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்க இந்த கண்டுபிடிப்புகள் உதவுகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications