Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'2 டோஸ் போதாது, பூஸ்டர் டோஸ் தேவை..' WHO எச்சரிக்கையை மீறி..பூஸ்டர் டோஸுக்கு அனுமதியளித்த அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் டெல்டா கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட அனுமதி அளித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலக நாடுகளை கொரோனா பாதிப்பு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை எந்த நாட்டினாலும் கொரோனா பாதிப்பை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

கொரோனா ஊரடங்கு வைரஸ் பாதிப்பு தற்காலிகமாக கட்டுப்படுத்தினாலும், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுமே வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிடுகின்றன.

 கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின்

தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. பைசர் தொடங்கி ஜான்சன் தடுப்பூசி வரை இதுவரை கொரோனாவுக்கு எதிராகப் பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் வேக்சின் செலுத்த வேண்டும் என்பதால் அந்தளவுக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை. இதனால் பல்வேறு இடங்களிலும் கொரோனா வேக்சினுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

 உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

இதனால் முதலில் அனைத்து நாடுகளிலும் உள்ள முன்களப் பணியாளர்களுக்கும் எளிதில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது. இதற்காக கோவாகஸ் என்ற திட்டத்தையும் முன்னெடுத்தது, ஆனால் அத்திட்டம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. அதேபோல உலக மக்களுக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடுவதற்கு முன்னரே வளர்ந்த நாடுகள் 3ஆவது பூஸ்டர் டோஸ் போட அனுமதிப்பது அடுத்த அலை ஏற்படவே வழிவகுக்கும் என எச்சரித்தது.

 அமெரிக்கா அனுமதி

அமெரிக்கா அனுமதி

இந்தச் சூழவில், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட அனுமதி அளித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் வெளியிட்டுள்ள உத்தரவில், "நாட்டில் கொரோனா பாதிப்பின் மற்றொரு அலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளைக் குறைக்கக் கடுமையான ஆபத்தில் உள்ள மோசமான நோயெதிர்ப்பு சக்தியை உடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட அனுமதி அளிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஏன்

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஏன்

அனைத்து உலக நாடுகளிலும் பொதுமக்களுக்கு 2 டோஸ் வேக்சின் முழுமையாகச் செலுத்தும் வரை பூஸ்டர் டோஸ் பணிகளைத் தொடங்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது. ஏனென்றால் அப்படி பூஸ்டர் டோஸ் பணிகளை வளர்ந்த நாடுகள் தொடங்கினால், பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு வேக்சின் பணிகள் இன்னும் தாமதமாகும். இதனால் வைரஸ் பாதிப்பு உயர்ந்து, உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

 ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்

இருந்தாலும்கூட, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை மீறி சில ஐரோப்பிய நாடுகள் பூஸ்டர் டோஸ் போட அனுமதி அளித்துள்ளது. உலகின் இதர பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வேக்சின் பணிகள் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பூஸ்டர் டோஸ் போடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Vaccine ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது | Dr. E Theranirajan explain | Oneindia Tamil
     டெல்டா கொரோனா

    டெல்டா கொரோனா

    அமெரிக்காவில் சில மாதங்களாகக் குறைந்திருந்த வைரஸ் பாதிப்பு இப்போது சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்டா கொரோனா வைரசே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் 2ஆம் அலை சமயத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா தற்போது 100+ நாடுகளுக்குப் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+