வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'அணு ஆயுத போர் வெடித்தால் கண்டிஷனர் வேண்டாம் ஷாம்பு பயன்படுத்துங்கள்' - அமெரிக்கா திடீர் அறிவுரை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ரஷ்யா அணு ஆயுத போருக்கு தயார் என்று கூறிய நிலையில், அணு ஆயுத போர் வெடித்தால் நாம் குளிக்கும்போது கண்டிஷனரை பயன்படுத்தினால் உயிரிழக்க நேரிடும் என்றும் இதனால் ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுரை வழங்கியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர் ஒரு ஆண்டுக்கு மேல் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் நாடை எளிதில் கைப்பற்றி விடலாம் என்ற ரஷ்யாவின் கணக்கை பொய்யாக்கி அந்நாட்டுக்கு கடும் சவால் அளித்து வருகிறது உக்ரைன்.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராணுவ தளவாட பொருட்கள் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

ஐயோ.. அம்மா.. இதுக்கு ஐயோ.. அம்மா.. இதுக்கு

ரஷிய அதிபர் பேச்சு

ரஷிய அதிபர் பேச்சு


இந்த விவகாரம் தொடர்பாக ஆத்திரமடைந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ''மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக அணு ஆயுத போரில் ஈடுபட போவதாகவும், ரஷியாவை அந்நாடுகள் அழிக்கபோவதாகவும் மிரட்டி வருகின்றன. குறிப்பாக இந்த நடவடிக்கைகளில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் உக்ரைனை ஊக்குவிக்கின்றன. ரஷியாவுக்கு எதிரான கொள்கைகளில் அந்நாடுகள் எல்லை மீறிவிட்டன. இதனால் ரஷியாவில் எல்லைகளை பாதுகாக்கவும் மக்களை பாதுகாக்கவும் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்த தயங்காது'' என பகிரங்க அறிவிப்பு வெளியிட்டார்.

அணு ஆயுத போருக்கு தயார்

அணு ஆயுத போருக்கு தயார்

அணு ஆயுத போருக்கு தயார் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்.. எதை செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தல்களை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ளது. அதில் அணு ஆயுத போர் வெடித்ததால், முடிகளுக்கு பயன்படுத்தப்படும் கண்டிஷனர்களை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

விரிவான விளக்கம்

அணு ஆயுத தாக்குதல் என்னவெல்லாம் நடக்குமோ என்று நாம் அனைவரும் பீதி அடைந்திருக்கும் சமயத்தில் உங்கள் முடிகளுக்கு கண்டிஷனர்களை பயன்படுத்தக்கூடாது என்ற அறிவுறுத்தல் பலருக்கும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. ஆனால், இதை ஏன் கண்டிப்பாக செய்யக்கூடாது என்பதற்கான விரிவான விளக்கத்தையும் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பான (CDC) வெளியிட்டுள்ளது. அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் காற்றில் கதிரியக்க தூசுகள் பரவும்.

ஷாம்பு உங்கள் உயிரை காப்பாற்றும்

ஷாம்பு உங்கள் உயிரை காப்பாற்றும்


இதனால் தூசு மண்டலம் போல காட்சியளிப்பதால் நாம் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்றும் எண்ணத்தை தூண்டும். மக்கள் அசுத்தமான ஆடைகளை களைந்துவிட்டு உடனே குளிக்கலாம்... குளிக்கும் போது கண்டிப்பாக தலைக்கு ஷாம்புவை பயன்படுத்துங்கள்.. ஏனெனில், உங்கள் முடியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் அழுக்குகளையும்.. எண்ணெய்களையும் நீரில் கழுவும் போது போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷாம்பு உங்கள் உயிரை காப்பாற்றும். ஆனால், கண்டிஷனர் பயன்படுத்துவது ஆபத்தாக முடியலாம். கதிரியக்க பொருள்களுக்கும் உங்கள் முடிகளுக்கும் இடையே ஒரு பசை போல கண்டிஷனர்கள் செயல்படக்கூடும்.

 மரணத்தை கூட ஏற்படுத்தும்

மரணத்தை கூட ஏற்படுத்தும்


இதனால், கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க கண்டிஷனரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கண்டிஷனரை பயன்படுத்துவதால் கதிரியக்க துகள்கள் மூலம் செல் மண்டலங்கள் சேதம் ஏற்படக்கூடும். மேலும் இது மரணத்தை கூட ஏற்படுத்தும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணு ஆயுத தாக்குதலை எதிர்கொள்ள நேர்ந்தால், கான்கீரிட் மற்றும் செங்கற்களால் கட்பட்ட கட்டிடங்களுக்குள் தஞ்சம் அடைந்து கொள்ள வேண்டும். இதனால், கதிர்வீச்சில் இருந்து தப்ப முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
While Russia has said it is ready for nuclear war, the US Centers for Disease Control has advised that in the event of a nuclear war, using conditioner in the shower could kill us and we should use shampoo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X