Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒத்தைக்கு ஒத்தையா நான் ரெடி.. புடின் நீங்க ரெடியா.. ரஷ்யாவுக்கு நேரடி சவால் விடுத்த எலான் மஸ்க்..!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன் : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா சுமார் 20 நாட்களாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் ரஷ்யாவிற்கு நேரடியாக சவால் விடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் மீது 20வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனில் தொலைத்தொடர்பு மற்றும் இணையதளம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள ரைவ்னே நகருக்கு வெளியே அமைந்துள்ள தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 9 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டோபில் கிராமத்தில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டிருப்போரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த பிராந்திய தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

ஏவுகணை தாக்குதல்

ஏவுகணை தாக்குதல்

தொலைக்காட்சி கோபுரம் மீது இரண்டு ஏவுகணைகள் அதிகாலை நேரத்தில் ஏவப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாவும் அவர் கூறினார். ரஷ்யாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டான்பாஸ் பகுதியில் தொடர்ந்து கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 100 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 6 வாகனங்கள் சேதமடைந்ததாவும் உக்ரைன் படைகள் சார்பில் கூறப்படுகிறது. எனினும் இதை ரஷ்ய தரப்பு உறுதி செய்யவில்லை.

எலான் மஸ்க் உதவி

எலான் மஸ்க் உதவி

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைன் நாட்டின் தொலைத்தொடர்பு இணைப்பு முழுவதும் சீர்குலைந்ததையடுத்து, எலோன் மஸ்க் உக்ரைனுக்கு இணையதள வசதிகளை வழங்கியிருந்தார். உக்ரைனின் துணைப் பிரதமர் மைக்கலோ ஃபெடோரோவ் உதவி கோரியதை அடுத்து, டெஸ்லாவின் ஸ்டார்லிங்க் இணைய முனையங்கள் போர் பாதித்த பகுதிக்கு அனுப்பப்பட்டு தொலைதொடர்பு சேவையை வழங்கினார் எலான் மஸ்க்.

Recommended Video

    Iraq மீது 12 ராக்கெட்டுகளை ஏவிய Iran | America VS Russia | Oneindia Tamil
    நேரடி சவால்

    நேரடி சவால்

    இந்நிலையில் எலான் மஸ்க் ரஷ்யாவிற்கு சவால் விடுத்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "இதன் மூலம் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒற்றைப் போருக்கான சவாலை விடுக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க். மேலும் அவர் "உக்ரைனின் தலைவிதியை ரஷ்யா ஆபத்தில் ஆழ்த்திவிட்டது" என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ரஷ்ய அதிபர் புதினைக் குறிப்பிட்டு "இந்த சண்டைக்கு ஒப்புக்கொள்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவை அவர் ரஷ்ய மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை கலந்து எழுதியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+