280 எழுத்துக்கள் போதாது.. பஞ்சாயத்தை துவக்கி வைத்த எலான் மஸ்க்! திணறிப் போன ட்விட்டர்! பின்னணி என்ன?
வாஷிங்டன் : ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ள நிலையில், ட்விட்டரில் கருத்து பதிவு செய்ய தனக்கு 280 எழுத்துக்கள் போதாது என கூறியுள்ளார்.
Recommended Video
தினந்தோறும் ஹாட் டாப்பிக்காக வலம் வரும் எலான் மஸ்க் ட்விட்டருடன் மோதல் போக்கை கொண்டு வருகிறார்.
ட்விட்டர் பயனர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கவில்லை எனவும், தனியுரிமை என்ற பெயரில் கருத்துரிமையை பாதிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

எலான் மஸ்க் அதிரடி
அதாவது ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார் . சுமார் 73.5 மில்லியன் ட்விட்டர் பங்குகளை வாங்கியதாக தெரிவித்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையால் எலான் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மாறியுள்ளார். ஆனாலும் விடாமல் ட்விட்டரை முழுமையாக கைப்பற்றப்போவதாகவும் கூறி ஆஃபரையும் வழங்கினார். ட்விட்டரை $43 பில்லியனுக்கு வாங்குவதாகவும் கூறினார்.

ட்விட்டர் பதிவு
இந்நிலையில் அடுத்த அதிரடியாக எலான் மஸ்க் ட்விட்டரில் ட்விட் செய்ய தனக்கு 280 எழுத்துக்கள் போதாது என கூறியுள்ளார். ட்விட்டர் தற்போது 280 எழுத்துகளில் ட்விட் செய்யவே அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் நவம்பர் 2017ல் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அனைத்து பயனர்களுக்கும் 280 எழுத்துகளை வைத்து பதிவிட அறிமுகப்படுத்தியது. முன்னதாக 140 எழுத்துகளில் மட்டுமே பதிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கை போதாது
ட்விட்டரில் தன்னை பின் தொடரும் நபருக்கு பதில் அளித்த எலான் மஸ்க் " ட்விட்டர் நீண்ட வடிவ ட்வீட்களுக்கு தாமதமாகிவிட்டது!" என்றார். முன்னதாக ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா என கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு 74.4 சதவீதம் பேர் எடிட் பட்டன் வேண்டும் என்றும், 25.6 சதவீதம் பேர் வேண்டாம் என்றும் வாக்களித்திருந்தனர். இந்த கருத்துக்கணிப்பை பகிர்ந்த ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் இந்த கருத்துகணிப்புக்கு கவனமாக வாக்களியுங்கள். இதன் விளைவு மிக முக்கியம் என கூறினார்.

சுதந்திரமான பேச்சு தளம்
"உலகளவில் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக ட்விட்டர் இருக்கும் என நம்பிக்கையின் அடிப்படையில் தான் அதில் முதலீடு செய்தேன். ஆனால், அதன் தற்போதைய வடிவத்தில் பேச்சு சுதந்திரத்தை முழுமையாக வழங்கும் நோக்கம் நிறைவேறாது என்பதை நான் இப்போது உணர்கிறேன். ட்விட்டரை ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும்" என்றும் எலான் மஸ்க் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications