இது கொஞ்சம் ஓவர்தான்.. சிம்பன்சி குட்டிகளை தூக்கிட்டு போய்.. பணம் கேட்டு மிரட்டிய கடத்தல் கும்பல்!
வாஷிங்டன்: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் சிம்பன்சி குரங்குகளை கடத்தி வைத்துக்கொண்டு உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
பணத்திற்காக ஆட்களை பிடித்துச் சென்று விட்டு, பின்னர் உறவினர்களை போனில் தொடர்பு கொண்டு உங்களுக்கு வேண்டியவரை உயிரோடு விட வேண்டும் என்றால் இவ்வளவு பணம் வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் பற்றி அவ்வப்போது கேள்வி பட்டு இருக்கிறோம்.
பல படங்களில் கூட இதனை மையமாக வைத்து காட்சிகள் அமைகப்பட்டு இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்திலும் இந்த கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டே படம் நகரும்.

கடத்தல் சம்பவம்
அதேபோல், உள்ளத்தை அளித்தா படத்தில் மணிவண்ணனை கடத்தி செல்லும் செந்தில் உள்ளிட்ட வில்லன் கும்பல் அவரை விடுவிக்க கார்த்தி மற்றும் கவுண்டமனியிடம் பணம் கேட்பர். இதற்கு கவுண்டமனி பயங்கரமாக கலாய்த்து விடுவார். இன்றளவும் அந்த காமெடி வேற லெவலில் ரசிக்கப்பட்டு வருகிறது. நிஜ வாழ்க்கையில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு போலீசிடம் மோசடி கும்பல்கள் சிக்குவதும் அடிக்கடி செய்திகளில் பார்க்க முடியும்.

பணம் கேட்டு மிரட்டல்
இதேபோலத்தான் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் ஒரு கடத்தல் சம்பவம் நடைபெற்றது. ஆனால், இதில் கடத்தப்பட்ட ஆட்கள் தான் ஹைலட். சரணாலயத்தில் இருந்த சிம்பன்சி குரங்குகளின் குட்டிகளை கடத்தி சென்றுவிட்டு பணம் கேட்டு கும்பல் மிரட்டியிருப்பதுதான் இந்த செய்தி டிரெண்ட் ஆகியிருப்பதற்கு காரணம். இந்த சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து 'கடங்கா விலங்குகள் சராணலயத்தை நடத்தி வரும் ஃபிராங்க் சாண்டேரோ கூறியிருப்பதாவது:-

சிம்பன்சி குரங்குகள் கடத்தல்
இந்த சரணாலயத்தில் உள்ள ஐந்து சிம்பன்சி குரங்கு குட்டிகளில் 3 ஐ கடத்தல் காரர்கள் திருடியிருகின்றனர். எனது பிள்ளைகள் சம்மர் விடுமுறைக்கு வீட்டிற்கு வருவதாக இருந்தனர். ஆனால், பிள்ளைகள் திட்டமிட்டபடி வரவில்லை. இதனால், எனது பிள்ளைகளை கடத்தலாம் என வந்த கடத்தல் கும்பல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். ஆனாலும் வெறும் கையோடு போகாமல் இங்கிருந்த சிம்பன்சி குட்டிகளை எடுத்து சென்று விட்டனர். பணத்திற்காக சிம்பன்சி குரங்குகளை கடதியிருப்பது இதுதான் முதல் தடவை என்றே நினைக்கிறேன்.

சட்டப்படி மீட்க உள்ளோம்
பணத்தை கொடுக்காவிட்டால் சிம்பன்சி குரங்குகளை போதைப்பொருள் கொடுத்து காயப்படுத்தப்போவதாக மிரட்டுகின்றனர். ஆனால், நான் பணம் கொடுக்க மாட்டேன். ஏனென்றால் கடத்தல் கும்பலை ஊக்கப்படுத்தும் வகையில் இது அமைந்துவிடும். இந்தப் பகுதியில் 23 சரணாலயங்கள் உள்ளன. இதனால், கடத்தல் கும்பல் இதே திட்டத்துடன் பிற விலங்குகளையும் கடத்துவர். இதனால், சட்டப்படி மீட்க உள்ளோம். வரும் காலங்களில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது'' என்றார்.

வரலாற்றில் முதல்முறை
இந்த சம்பவம் குறித்து காங்கோ நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் மைக்கேல் கோயக்பா கூறியதாவது:- சிம்பன்சி குரங்குகள் கடத்தப்பட்ட சம்பம் மனிதாபிமானமற்றது. இயற்கைக்கு முரணானது. கடத்தல் கும்பல் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விரைவில் சிம்பன்சி குட்டிகள் மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது வரலாற்றில் இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன்'' என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications