வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க போய்ட்டீங்களா புஷ்.. சவப்பெட்டிக்கு அருகில் சோகத்துடன் சுல்லி

புஷ் இல்லாமல் சவப்பெட்டிக்கு அருகில் சுல்லி சோகமாக இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் சீனியர் மரணம்

    வாஷிங்டன்: புஷ்-க்கு எல்லாமே சுல்லிதான்.... சுல்லி இல்லாமல் அவர் எங்கேயுமே நகருவது கிடையாது. ஆனால் அவர் இல்லாமல் இப்போது சுல்லிதான் அங்கே இங்கே என நகர முடியாமல் தவித்து கிடக்கிறது.

    அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் 2 நாளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் அவர் வளர்த்து வந்த ஒரு நாய் ஒன்று அவரை காணாமல் ஏங்கி கிடக்கிறது. பலகாலம் நோயால் அவதிப்பட்டு வந்த புஷ்ஷிற்கு எல்லாமே அந்த நாய்தான். அதன் பெயர் சுல்லி.

    கதவை திறந்துவிடும்

    கதவை திறந்துவிடும்

    புஷ் எப்பவுமே வீல்சேரில்தான் இருந்தார். அதனால் அவர் காலுக்கடியிலேயே இந்த சுல்லியும் எப்பவும் இருக்கும். ஏதாவது பொருள் வேண்டும் என்று கேட்டால் சுல்லி ஓடிப்போய் கொண்டு வந்து தரும். அவர் எந்த பக்கம் செல்கிறாரோ, அந்த வழியாக உள்ள கதவை முன்கூட்டியே திறந்துவிட்டு விடும்.

    சோகத்துடன் சுல்லி

    சோகத்துடன் சுல்லி

    வீல் சேர் போல எப்பவுமே சுல்லி புஷ்ஷூடனே சுற்றி சுற்றி வரும். இப்போது புஷ் எங்கே என அந்த வீல் சேரையே சுற்றி சுற்றி வருகிறது. புஷ் சென்ற இடங்களிலெல்லாம் தேடி வந்துவிட்டது. பிறகு புஷ்ஷின் உடல் எங்கு வைக்கப்பட்டிருந்ததோ, அதே இடத்தில், இப்போதும் சோகத்துடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

    சவப்பெட்டி

    சவப்பெட்டி

    இப்படி சுல்லி சவப்பெட்டி அருகே சோகமாக உட்கார்ந்திருக்கும் ஒரு போட்டோவை, புஷ் வீட்டின் செய்தித்தொடர்பாளர் ஜிம் மெக் க்ராத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எடுத்து வெளியிட்டுள்ளார்.

    பணி முடிந்தது

    பணி முடிந்தது

    மேலும் "பணி முடிந்தது" என்ற வார்த்தையும் பதிவிட்டுள்ளார். சோகமாக சுல்லி உட்கார்ந்திருக்கும் இந்த போட்டோ மிகவும் வைரலாகி வருகிறது. புஷ் இனி வரவே மாட்டார் என்று சுல்லிக்கு புரிய வைப்பது எப்படி?

    English summary
    George Bush's Service Dog Stays By His Casket. Viral Photo
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X