அடேங்கப்பா இவ்வளவு ரேட்டா? உலகிலேயே அதிக விலைக்கு விற்று சாதனை படைத்த திராட்சை பழம்..ஆடிப்போன மக்கள்
வாஷிங்டன்: ஜப்பானில் ஜூசி திராட்சை என்றழைக்கப்படும் ரூபி ரோமன் திராட்சை ரூ. 8 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ரூபி ரோமன் என்ற திராட்சை இவ்வளவு தொகைக்கு ஏலம் போயிருக்கிறது. இது உலகிலேயே அதிக விலை கொண்ட திராட்சை பழம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மனிதனின் உணவுப் பட்டியலில் பழங்களுக்கு கட்டாயம் இடம் உண்டு. சரிவிகித உணவு மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதற்கு பழங்களை அவசியம் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கும்.
ஆரோக்கியமான உணவின் ஒரு அங்கமாக இருக்கும் பழங்களில் இருக்கும் வைட்டமின்கள் மனிதன் நோய் நொடியின்றி வாழ்வதற்கு மிக அவசியமானவையாகும்.

உடல் சார்ந்த நன்மைகளை தரும் பழங்கள்
பழங்களை பொருத்தவரை ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்றவாறு பழம் வகைகள் கிடைக்கின்றன. இதய நோய் அபாயத்தைக் குறைப்பது, ரத்த அழுத்தத்தை பராமரிப்பது, புற்றுநோயை உண்டாக்கும் செல்களை கட்டுப்படுத்துவது உள்பட பல்வேறு உடல் சார்ந்த நன்மைகளை பழங்கள் வழங்குகின்றன. இதனால் உலகம் முழுவதும் பழங்கள் சந்தை மதிப்பு பல கோடிகளில் இருக்கிறது. ஒவ்வொரு சீதோஷ்ண நிலையிலும் ஒவ்வொரு வகையான பழங்கள் கிடைப்பாதால் ஏற்றுமதி இறக்குமதியும் செய்யப்பட்டு வருகின்றன.

திராட்சை பழங்கள்
விருந்தினர்கள் வீட்டிற்கு சென்றாலோ.. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்றாலோ.. மக்கள் முதலில் வாங்குவது பழங்கள் வகையாகத்தான் இருக்கும். வாழைப்பழங்கள், ஆப்பிள், திராட்சை போன்ற பழ வகைகளே பெரும்பாலும் மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதிலும் திராட்சை பழங்களை பொறுத்தவரை விலையும் சற்று மலிவாக இருக்கும் என்பதால் பலரும் இதை விரும்பி வாங்குவதுண்டு. பலரும் பேரம் பேசி வாங்குவதையும் நம்ம ஊரில் பார்த்து இருப்போம்.

உலகிலேயே அதிக விலை
ஆனால், ஜப்பானில் ஒரு திராட்சை விலையை கேட்டால் தலை சுற்றி மயக்கம் போட்டு விடுவோம் என்ற அளவுக்கு அதன் விலை உள்ளது. ஜூசி திராட்சை என்றழைக்கப்படும் ரூபி ரோமன் திராட்சை ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ரூபி ரோமன் என்ற திராட்சை இவ்வளவு தொகைக்கு ஏலம் போயிருக்கிறது. இது உலகிலேயெ அதிக விலை கொண்ட திராட்சை பழம் என்ற பெருமையும் பெற்று கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

கடுமையான தர பரிசோதனைகளுக்கு பிறகே
ஒரு திராட்சை கொத்தில் இருக்கும் ஒரே ஒரு திராட்சை விலை மட்டும் சுமார் 30 ஆயிரம் ரூபாயாம். இந்த ரூபி ரோமன் திராட்சை, ஜப்பானின் ஹியோகோ மாகாணத்தில் உள்ள அமகாசாகியில் உள்ள பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜப்பானில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த பழங்களை பரிசளிப்பது ஒரு பாரம்பரிய பழக்கமாக உள்ளது. இதனால், இந்த பழம் எப்போதும் விலை அதிகமாகவே இருக்குமாம். குறிப்பிட்ட இந்த பழம் அங்குள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கிறது. ஜப்பானில் கடுமையான தர பரிசோதனைகளுக்கு பிறகே பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.












Click it and Unblock the Notifications