பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்தது ஏன்? அமெரிக்கா கொடுத்த விளக்கத்தை பாருங்க
வாஷிங்டன்: ‛‛இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானில் தற்செயலாக விழுந்துள்ளது. இதற்கு பின்னணியில் வேறு காரணம் எதுவுமில்லை. இது ஒரு விபத்து தான்'' என அமெரிக்கா கூறியுள்ளது.
Recommended Video
ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணை மார்ச் 9ல் பாகிஸ்தான் நிலப்பரப்பில் தவறுதலாக விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்தேசம் ஏற்படவில்லை.
இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் இது பூதாகரமாக வெடித்தது.

மறுக்கும் பாகிஸ்தான்
இதுதொடா்பாக விசாரிக்க இந்திய பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. வழக்கமான பராமரிப்பு பணியின்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தான் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது தெரியவந்தது. இதற்கு வருந்துவதாக இந்தியா தரப்பில் பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் பதிலை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.

எதிர்வினையாற்ற முடியும்
மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவை குற்றம்சாட்டி வருகிறார். மேலும் ‛‛இந்தியாவின் ஏவுகணை விழுந்தவுடன் பாகிஸ்தான் பதிலடி கொடுத்திருக்க முடியும். உடனே எதிர்வினையாற்றி இருக்கலாம். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்த பிரச்சனையை சரியாக கையாண்டுள்ளோம்'' என தற்பெருமை அடித்து கொண்டார்.

அமெரிக்கா கருத்து
இந்நிலையில் பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்தது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ் கூறியதாவது: இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் தற்செயலாக விழுந்துள்ளது. இதற்கு பின்னணியில் வேறு காரணம் எதுவுமில்லை. இது ஒரு விபத்து தான். ஏவுகணை ஏவப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. என்ன நடந்தது என்பது குறித்து துல்லியமான அறிக்கையை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது'' என கூறியுள்ளார்.

ராஜ்நாத் சிங் விளக்கம்
இதற்கிடையே ராஜ்யசபாவில் இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‛‛ இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்றது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகமானது மற்றும் பாதுகாப்பானது என்பதை உறுதியளிக்கிறேன். எனினும் இச்சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதுடன் உயர்மட்ட விசாரணைக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்கப்பட்டுள்ளது ''என்றார்.












Click it and Unblock the Notifications