இரு துருவங்கள்: பால்ய நண்பன் ரஷ்யா VS காலேஜ் தோழன் அமெரிக்கா.. யாருக்கு இந்தியா சப்போர்ட் செய்யும்?
வாஷிங்டன்: ரஷ்யா-உக்ரைன் தொடர்பான போரில் வெவ்வேறு நிலைப்பாட்டுடன் இந்தியா-அமெரிக்கா இருதுருவங்களாக உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போர் தொடங்கியது. உக்ரைன் தலைநகர் கிவ், கார்னவ் உள்பட பல நகரங்களில் வான்வழி, தரைவழி தாக்குதலை துவங்கியுள்ளது. முதல் நாள் தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
இதனால் உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய போர் விமானங்கள், ஹெலி காப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று 2வது நாளாக போர் தொடர்கிறது. இதனால் இன்னும் உயிர்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பிரதமர் பேச்சு
ரஷ்யா போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, ‛‛ உக்ரைன்-ரஷ்யா போரில் நடுநிலைமையை இந்தியா வகிக்கும். இப்போரை உடனடியாக நிறுத்துங்கள். நேட்டோ-ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு'' என வலியுறுத்தினார்.

ஜோ பைடன் தகவல்
முன்னதாக நேற்று அமெரிக்கா வெள்ளை மாளிகைளில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள விவகாரத்தில் இந்தியா, அமெரிக்காவுடன் கைகோர்க்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜோ பைடன், "நாங்கள் இந்தியாவுடன் (உக்ரேனிய நெருக்கடி குறித்து) பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதில் இன்னும் தீர்க்கமான முடிவு எடுக்கவில்லை " என கூறினார்.

இந்தியா ஏன் முக்கியம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்தியா ரஷ்யாவிடம் பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகார் பொலிகாநேற்று கூறினார். தற்போதும் அமெரிக்க அதிபரிடம் இந்தியா குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.
அதாவது, ரஷ்யாவுடன் இந்தியா நல்ல உறவு வைத்துள்ளது. இது பால்ய கால நட்பு. நீண்ட கால நட்பு. அதேநேரம், அமெரிக்காவுடனும் சமீப காலங்களாக நல்லுறவை இந்தியா வளர்த்துள்ளது. இதனால்தான் ரஷ்யா பால்ய கால நண்பன் என்றால், அமெரிக்கா கல்லூரி காலத்தில் சேர்ந்த நண்பன் என்கிறார்கள் சர்வதேச விவகார நிபுணர்கள். இதனால் தான் வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை மற்றும் அதன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முதல் பல்வேறு மட்டங்களில் உள்ள ஜோ பைடனின் நிர்வாகிகள் உக்ரைன் பிரச்சனையில் சுமூக தீர்வுக்கு இந்தியாவை நாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போரில் இருதுருவங்களா...
ஆனால் ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பது தெரிவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலைமை நிலைப்பாட்டில் உள்ள நிலையில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிரான, உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நடுநிலைமை
எனினும் இந்தியா, ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு ஒருபோதும் ஆதரவு தெரிவிக்காது. இது பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. போரை கைவிட இந்தியா வலியுறுத்துமே தவிர அமெரிக்கா பிற நாடுகள் போன்று ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா ஒருபோதும் எடுக்காது என அவர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணமாக இந்தியாவுக்கு அணுஆயுத மூலப் பொருள் முதல் ராணுவ தளவாட பொருட்கள் வரை ரஷ்யா தான் வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் மேற்கொள் காட்டுகின்றனர். அதேநேரத்தில் அமெரிக்காவையும் இந்தியா பகைத்து கொள்ளாது. இதனால் ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா நடுநிலைமையான நிலைப்பாட்டிலேயே பயணிக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications