வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“ஹை ஸ்பீட்”.. அந்த “பேராபத்து” பூமியை நோக்கி வருது! மைதானத்தைவிட பெருசாம் - நாசா அவசர எச்சரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பெரிய விளையாட்டு மைதானத்தின் அளவு கொண்ட குறுங்கோள் ஒன்று பூமியின் திசைநோக்கி மணிக்கு 48,168 கிலோ மீட்டர் வேகத்தில் வருவதாக நாசா அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களில் செயற்கைக்கோள்கள், தொலைநோக்கிகள் மூலமாக ஆராய்ந்து பல்வேறு அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில்தான் தற்போது அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது நாசா. விண்ணில் கோள்கள், நட்சத்திரங்கள், விண்கற்களை போன்றே எண்ணிலடங்காத குறுங்கோள்கள் உள்ளன.

தாழ்வு மண்டலம் எவ்வளவு தூரத்தில் உள்ளது? அடுத்த 2-3 நாள் என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங் தாழ்வு மண்டலம் எவ்வளவு தூரத்தில் உள்ளது? அடுத்த 2-3 நாள் என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்

குறுங்கோள்கள்

குறுங்கோள்கள்

அந்த குறுங்கோள்கள் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக ஐயமூட்டும் தகவல் நாசாவின் சமீபத்திய ஆய்வு மூலம் கிடைத்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக பான் ஸ்டார்ஸ், தி கேட்டலினா ஸ்கை, தி நியோ வைஸ் ஆகிய உயர்ரக தொலைநோக்கிகள், விண்வெளி ஆய்வு நிலையங்கள் மூலமாக குறுங்கோள்களின் நகர்வை நாசா உண்ணிப்பாக கவனித்து வருகிறது.

அவசர எச்சரிக்கை

அவசர எச்சரிக்கை

இதில் சில குறுங்கோள்கள் மிதப்பதாகவும், சில தரையில் விழுந்துவிட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான் நாசா குறுங்கோள் தொடர்பான ஒரு புதிய அவசர எச்சரிக்கையை பூமிக்கு விடுத்து இருக்கிறது. அதுதான் பூமியை நோக்கி மைதானத்தை விட பெரிய குறுங்கோள் ஒன்று நெருங்குவதாக வெளியான தகவல்.

நெருங்கும் குறுங்கோள்

நெருங்கும் குறுங்கோள்

2019 OR1 என்ற பெயர் கொண்ட குறுங்கோள் பூமியிலிருந்து 43 லட்சம் கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. இந்த குறுங்கோள் பூமியை நோக்கி அதிவேகத்தில் நெருங்கி வருவதாக நாசா அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு உள்ளது. விண்ணில் 48,168 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி அந்த குறுங்கோள் வருவதாக நாசா கூறி இருக்கிறது.

பேரழிவுகளுக்கு வாய்ப்பு

பேரழிவுகளுக்கு வாய்ப்பு

ஆனால், இது நேராக பூமியை தாக்கும் என்றும் நாசா கணிக்கவில்லை. பூமியில் இருக்கும் புவி ஈர்ப்பு சக்தியால் அதன் பாதையில் லேசான மாறுபாடுகள் ஏற்படலாம் என்றும், அதே நேரம் பேரழிவுகளுக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் நாசா எச்சரித்து உள்ளது. இதற்காக PDCO எனப்படும் கோள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

கண்காணிப்பு

கண்காணிப்பு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசாவின் தலைமை அலுவலகத்தில் கோள் அறிவியல் பிரிவு இதனை கண்காணித்து வருகிறது. இந்த PDCO அமைப்பின் பணி பூமியிலிருந்து 8 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவிற்குள் குறுகோள்கள், வால்மீன்களால் ஏற்படப்போகும் பாதிப்புகளை கண்காணிப்பதாகும்.

டார்ட் திட்டம்

டார்ட் திட்டம்

புவியின் சுற்றுவட்டப்பாதையில் ஏற்படப்போகும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள டார்ட் எனப்படும் திட்டத்தை நாசா நிறைவு செய்து இருக்கிறது. பூமியை நோக்கி வரும் குறுங்கோள்களின் திசையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தே டார்ட் திட்டத்தின் நோக்கம்.

திசை மாற்றி

திசை மாற்றி

பூமியை நோக்கி வரும் விண்கற்கள், குறுங்கோள்கள் மூலமாக ஏற்படும் ஆபத்தை தடுப்பதற்கான முதல் முயற்சி இந்த டார்ட் திட்டம். இந்த டார்ட் மூலம் குறுங்கோள்களை 570 கிலோவாக குறைக்க முடியும். அதே நேரம் குறுங்கோள்களை அழிப்பது இதன் நோக்கமல்ல. அது செல்லும் திசையை மாற்றுவதே முக்கிய நோக்கம்.

English summary
An asteroid the size of a large playground is nearing towards Earth at a speed of 48,168 kilometers per hour, NASA has issued an emergency warning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X