இந்தியாவிற்கு இப்போது தேவை வலுவான எதிர்க்கட்சி.. அமெரிக்காவில்.. ரவிசங்கர் குருஜி பேச்சு
வாஷிங்டன்: ‛‛இந்தியாவுக்கு வலுவான, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி தேவை. தற்போதைய எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது'' என வாழும் கலை அறக்கட்டளையின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி கூறியுள்ளார்.
பெங்களூரில் உள்ள வாழும் கலை அறக்கட்டளையின் நிறுவனராக இருப்பவர் ரவிசங்கர் குருஜி. இவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்காவின் மியாமியில் மனநலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு தியானத்தின் பங்கு என்ற தலைப்பில் நடந்த மருத்துவர்களின் மாநாட்டில் பேசினார்.
அதன்பிறகு பாஸ்டனுக்குச் சென்றார், அங்கு அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மனதின் குழப்பம் தொடர்பான விஷயங்களை பேசினார்.

ரவிசங்கர் குருஜி பேட்டி
அப்போது, ‛‛கொரோனா பரவல் காலக்கட்டதால் மக்கள் மேகாம் கொள்ள துவங்கி உள்ளனர். இது உளவியல் ரீதியாக ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்து கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார். மேலும், தியானத்தின் பலன்கள் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தார். இந்த வேளையில் அவர் இந்திய அரசியல் குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எதிர்க்கட்சி இல்லை
தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு வலுவான, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தேவை. தற்போது உள்ள எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது. மேலும் எதிர்க்கட்சிக்கு தலைமை இல்லாதது ஜனநாயக விரோதமானது போல் தெரிகிறது. ஜனநாயக அமைப்பில் ஆளும் கட்சிக்கு எப்போதும் வலுவான எதிர்க்கட்சி தேவை. ஆனால் இந்தியாவில் தற்போது ஆளும்கட்சியை எதிர்க்கும் வகையிலான ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி இல்லை.

அமைதியான முறையில் தேர்தல்
இந்தியா ஒரு சக்திவாய்ந்த துடிப்பான ஜனநாயகம் உள்ள நாடாக உள்ளது. நாட்டில் அமைதியான முறையில் தேர்தல்கள் நடக்கின்றன. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்து முடிந்தது. ஏனென்றால் இந்தியாவின் எந்த கட்சியும் அரசியலமைப்பின்படி செயல்படும் நிறுவன முடிவில் தலையிட முடியாது. மேலும் நீதித்துறை வலுவாக உள்ளது.

எதேச்சதிகார நாடாக...
இருப்பின் மத்திய அரசியலில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால் எதேச்சதிகாரம் கொண்ட நாடாக வெளியுலகிற்கு இந்தியாவை காட்டும். ஆனால் நமது நாட்டில் அது நடைபெறவில்லை. ஏனென்றால் நம் நாட்டில் மக்கள் சக்தி படைத்தவர்கள்'' என கூறினார். இதன்மூலம் மத்திய பாஜக அரசை எதிர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி உள்பட எந்த கட்சியும் இல்லை என ரவிசங்கர் குருஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications