இந்தியாவில் மதரீதியான நிகழ்வுகள் கவலையளிக்கிறது! சர்வதேச மதசுதந்திரத்துக்கான அமெரிக்க தூதர் கருத்து
வாஷிங்டன்: என் அப்பாவும் இந்தியாவில் இருந்து வந்தவர் தான். இந்தியாவில் மதரீதியான நிகழ்வுகள் கவலையளிக்கிறது. இந்தியாவின் மதிப்புகள் காக்கப்பட வேண்டும் என சர்வதேச மதசுதந்திரத்துக்கான அமெரிக்க தூதர் ரஷாத் உசேன் கூறினார்.
சர்வதேச மதசுதந்திரத்துக்கான அமெரிக்க தூதராக ரஷாத் உசேன் உள்ளார். இந்நிலையில் அமெரிக்கா வாஷிங்டனில் சர்வதேச மதசுதந்திரத்துக்கான மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் நேற்று முன்தினம் சர்வதேச மதசுதந்திரத்துக்கான அமெரிக்க தூதர் ரஷாத் உசேன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து வந்த தந்தை
‛‛எனது தந்தை 1969ல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தார். அமெரிக்கா அவருக்கு எல்லாவற்றையும் வழங்கியது. ஆனால் அவர் இன்னும் இந்தியாவை நேசிக்கிறார். ஒவ்வொரு நாளும் அங்கு நடப்பதை ஆர்வமுடன் தெரிந்து கொள்கிறார். இந்தியாவில் நடக்கும் விஷயங்கள் குறித்து எங்களுக்குள் உரையாடல் நடப்பது உண்டு. இந்தியாவின் மதிப்புகள் காக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம்.

புல்டோசரால் வீடு இடிப்பு
இந்தியாவில் இப்போது குடியுரிமை சட்டம் என்பது ஏட்டளவில் உள்ளது. இந்தியாவில் இனப்படுகொலை நடப்பதாக புகார் எழுந்தது. மேலும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஹிஜாப்புக்கு தடை விதித்தது, வீடுகளை புல்டோசர் மூலம் இடித்தது பற்றியும் நாங்கள் அறிந்து உள்ளோம்.

அமித்ஷா மீது விமர்சனம்
அதோடு ஒரு மத்திய அமைச்சர் (மறைமுகமாக அமித்ஷா) வங்கதேச முஸ்லிம்களை கரையான்கள் என்று குறிப்பிடுகிறார். இதனால் நாங்கள் கவனித்து செயல்பட வேண்டியது முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் பல மதகுழுக்கள் உள்ளன. மேலும் மதம் சார்ந்த நிகழ்வுகள் நடந்கின்றன. இது கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பான பிரச்சனையை சமாளிப்பது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் பேசி உள்ளோம்.

மதசுதந்திர பாதுகாப்பே எங்கள் பணி
இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரங்கள் குறித்து பேசுவது அமெரிக்காவின் பொறுப்பாகும். இந்திய கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களை நான் சந்தித்து உரையாடி இருக்கிறேன். எந்தவொரு சமூகமும் அதன் ஆற்றலுக்கு ஏற்ப வாழ அனைத்து மக்களின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். மேலும் உலகில் வசிக்கும் மக்களின் மதசுதந்திரத்தை பாதுகாப்பதே எங்களுக்கான பணி.

உதய்ப்பூர் கொலைக்கு கண்டனம்
அனைத்து மக்களின் உரிமைகளுக்காக நாம் ஒன்றிணைந்து போராடுவது முக்கியம். யாரேனும் தாக்கப்பட்டிருந்தால், புதிதாக ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தால் அதனை நாம் கண்டிக்க வேண்டும். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் டெய்லர் கண்ணையாலால் கொலைக்கு கண்டனம் தெரிவித்த அவர் இத்தகைய தாக்குதல் வெறுக்கத்தக்க செயலாகும்'' என்றார்.

அமெரிக்காவின் முந்தைய அறிக்கை
முன்னதாக ஜூன் 2ல் அமெரிக்க வெளியுறவுத்துறையின் 2021 சர்வதேச மத சுதந்திர அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், 2021ம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள், வன்முறைகள், மிரட்டல்கள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

நிராகரித்த இந்தியா
இந்த அறிக்கையை இந்தியா நிராகரித்தது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‛‛ சர்வதேச மத சுதந்திரம் பற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை 2021க்கான அறிக்கையை புறக்கணிக்கிறோம்.இது, மூத்த அமெரிக்க அதிகாரிகளின் தவறான தகவல்களாகும். சர்வதேச உறவுகளில் வாக்கு வங்கி அரசியல் நடத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது தவிர்க்கப்பட வேண்டும். இயற்கையாகவே இந்தியா பன்முகத்தன்மையுடன் உள்ளது. இந்தியா மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மதிக்கிறது. அமெரிக்காவுடனான எங்கள் கலந்துரையாடல்களில் இன மற்றும் இனரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்கள், வெறுக்கத்தக்க குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறை உள்ளிட்ட கவலைக்குரிய விஷயங்களை நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தியுள்ளோம்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications