இது தாங்க அதிர்ஷ்டம்! ஏதேச்சையாக வாங்கிய லாட்டரிக்கு ரூ.8 கோடி.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன பெண்
வாஷிங்டன்: எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தை நிறுத்திய இடத்தில் பெண் ஒருவர் தற்செயலாக லாட்டரி வாங்கியுள்ளார். இதில் அவர் வாங்கிய லாட்டரிக்கு ரூபாய் 8 கோடி பரிசு கிடைத்துள்ளதால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்கென அடித்தது யோகம் என்று பேச்சு வழக்கு உண்டு.
இந்த சொல் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ.. லாட்டரியில் பரிசு அடிப்பவர்களுக்கு கண்டிப்பாக பொருந்தும்.

ஒரே நாளில் கோடீஸ்வரர்
பல வருடங்களாக லாட்டரியில் பரிசு அடிக்கும் என்று ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்து ஏமாந்து போகிறவர்கள் ஒருபக்கம் இருக்கின்றனர். ஆனால், சிலருக்கோ வாங்கிய முதல் டிக்கெட்டில் கூட பரிசு விழுந்து கோடிஸ்வரர்கள் ஆக்கி விடும். அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என்று எளிதில் சொல்லிவிட முடியாது. எதிர்பாராத விதமாக கோடீஸ்வரர்கள் ஆக்கிவிடுகிறது. இந்தியாவில் கூட கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனையாகிறது. கடந்த ஓணம் பண்டிகையை ஒட்டி கேரள அரசு வெளியிட்ட லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசை ஆட்டோ டிரைவர் அனூப் வாங்கி இந்தியா முழுவதும் ஒரே நாளில் புகழ் வெளிச்சம் அடைந்தார்.

1 மில்லியன் டாலர் லாட்டரி பரிசு
லாட்டரியில் அவருக்கு கிடைத்த தொகை மட்டும் ரூ.25 கோடியாகும். இவ்வளவு பணத்தை வென்றதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த அனூப், பின்னாளில் நிம்மதி இழந்து தவித்ததாக புலம்பியதெல்லாம் வேறு கதை... இப்படி லாட்டரி மூலம் சிலர் பணக்காரர் ஆகி வருகின்றனர். இதேபோல தான் அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில், பெண் ஒருவர் ஒரே நாளில் 1 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். தற்செயலாக அவர் வாங்கிய லாட்டரிக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது.

எரிபொருள் குறைவாக இருப்பதாக
பரிசு விழுந்த இந்த லாட்டரியை அந்த அதிர்ஷ்டசாலி வாங்கிய கதைதான் பலரையும் வியப்படைய செய்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள வின்ஸ்டன்-சேலம் என்ற நகரத்தை சேர்ந்தவர் லவுரா கீன். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிப்ட் பொருட்கள் வாங்குவதற்காக லவுரா கீன் தனது ஆண் நண்பருடன் டிரக்கில் சென்று கொண்டுள்ளார். டிரக்கில் எரிபொருள் குறைவாக இருப்பதாக அவருக்கு அலார்ட் கிடைத்து இருக்கிறது. இதனால், வரும் வழியில் ஏதாவது ஒரு எரிபொருள் நிலையத்தில் வாகனத்திற்கு எரிபொருளை நிரப்ப வேண்டும் என்ற திட்டத்துடன் இருவரும் பயணித்து இருக்கின்றனர்.

எதேச்சையாக லாட்டரி டிக்கெட்
அப்போது கெர்னெர்ஸ்வில்லே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி எரிபொருள் நிரப்பியிருக்கின்றனர். அப்போது எதேச்சையாக அங்கிருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பார்த்து இருக்கிறார். அதுவரை லாட்டரி டிக்கெட்டுகளை வங்கும் எண்ணம் இவருக்கு துளி கூட கிடையதாம். இந்த டிக்கெட்டுகளை பார்த்ததும் சரி வாங்கித்தான் பார்ப்போமே.. என்று அங்கிருந்த ஸ்க்ராட்ச் ஆப் வகையை சேர்ந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.

எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறோம்
அவரது அதிர்ஷ்டம் அந்த லாட்டரிக்கே ஒரு கோடி இரண்டு கோடி அல்ல.. ரூபாய் 8 கோடி பரிசாக அடித்துள்ளது. எரிபொருள் நிரப்ப வந்த நேரத்தில் இப்படி ஒரு பரிசு அடித்து இருக்கிறதே என்ற சந்தோஷத்தில் அங்கேயே இருவரும் துள்ளி குதித்து இருக்கின்றனர். இது குறித்து கீன் கூறுகையில், "நாங்கள் வந்த வாகனத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டியிருந்ததால் மட்டுமே இங்கே நிறுத்தினோம். இல்லாவிட்டால் இந்த லாட்டரியையே வாங்கியிருக்க மாட்டோம். எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறோம்" என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications