"ஓ! இதற்கு பேர் தான் அதிர்ஷ்டமா".. வேண்டா வெறுப்பாய் வாங்கிய லாட்டரிக்கு ரூ.85 லட்சம் பரிசு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோலினா மாகாணத்தில் வேண்டா வெறுப்பாக வாங்கிய டிக்கெட்டுக்கு ரூ.85 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. இதை பார்த்ததும் ஒரு நிமிடம் ஹார்ட் அட்டாக்கே வந்தது போல ஆகிவிட்டது. நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு அவ்வப்போது நிஜ வாழ்விலும் இப்படியெல்லாம் நடந்து விடும் என்பதை சமீப காலமாக வெளியாகும் செய்திகள் நிரூபித்து வருகின்றன.
அதிலும் ஒருசிலர் லாட்டரி பரிசு மூலமாக ஒரே நாளில் கோடிஸ்வரராகி பலரையும் பொறாமையில் ஆழ்த்தி விடுகிறார்கள்.

கரோலினா மாகாணத்தில்..
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் லாட்டரிகள் அதிக அளவில் கிடைக்கின்றன. அடிக்கடி லாட்டரி சீட்டுக்கள் வாங்கி பல லட்சங்கள் பரிசாக தட்டி சென்று மகிழ்ச்சிக் கடலில் திளைப்பதும் இது தொடர்பான செய்திகள் வெளியாகி பலரையும் பொறாமை பட வகையில் இருப்பதும் வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. கரோலினா மாகாணத்தில் பல்வேறு வகையான லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

சுரண்டல் வகை லாட்டரி சீட்டுகள்
எண்களை வரிசைப்படுத்தி அதன் அடிப்படையில் பரிசுகளை வெல்லும் வகையிலான லாட்டரி சீட்டுக்கள் கரோலினாவில் ஏகத்துக்கும் பிரபலமாக உள்ளது. அதேபோல், ஸ்க்ராட்ச் ஆப் (சுரண்டல்) வகை லாட்டரி சீட்டுக்கள் விற்பனையும் அங்கு அதிக அளவில் உள்ளது. ஸ்க்ராட்ச் ஆப் லாட்டரிகளை பொருத்தவரை மறைக்கப்பட்டு இருக்கும் எண்களை சுரண்டி அதில் பரிசுக்கான எண்கள் இருக்கிறதா? என பார்க்க வேண்டும்.

82 லட்சம் ரூபாய் பரிசு
இந்த நிலையில், கலிபோர்னியாவை சேர்ந்த டனா ப்ரூயிட் என்ற 62-வயது பெண், வழக்கமாக வாங்கும் லாட்டரி தீர்ந்து விட்டதால் எதேச்சையாக வேறு நிறுவன லாட்டரியை வாங்கியிருக்கிறார். இதுவரை பெரிதாக பரிசு எதுவும் அவருக்கு அடிக்காத நிலையில், புதிதாக வாங்கிய இந்த லாட்டரிக்கு 1 லட்சம் டாலர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார். இதனால், சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்காத குறைதான் அந்த பெண்மணிக்கு. மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்த டானா பரயீட் இது குறித்து கூறியதாவது:-

வந்ததற்கு ஏதாவது..
கரோலினா மாகாணத்தில் உள்ள மவுண்ட் ஐரியில் உள்ள மேபெர்ரி மார்ட்டில் தான் வழக்கமாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவேன். எப்போதும் வாங்கும் சுரண்டல் வகை டிக்கெட்டை கடைக்காரரிடம் கேட்டேன். ஆனால் அது விற்று தீர்ந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், மிகுந்த ஏமாற்றம் அடைந்த நான். இவ்வளவு தூரம் வந்து விட்டோம்.. வந்ததற்கு இரண்டாவது விருப்பமாக இருந்த மற்றொரு டிக்கெட்டை வாங்கி விடுவோம் என்று வேறொரு நிறுவன லாட்டரி டிக்கெட்டை வாங்கி சுரண்டி பார்த்தேன்.

சிறந்த வெற்றி இதுதான்
அப்போது எனக்கு 1 லட்சம் டாலர் பரிசு விழுந்தது. இதை பார்த்ததும் ஒரு நிமிடம் ஹார்ட் அட்டாக்கே வந்தது போல ஆகிவிட்டது. நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்த தொகையை எனது ஓய்வு கால சேமிப்பாகவும் நியூ இங்கிலாந்திற்கு சுற்றுலா செல்வதற்காக பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளேன். இதுவரை எனக்கு கிடைத்த வெற்றிகளில் சிறந்த வெற்றி இதுதான்" என்றார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications