வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

15 நொடிக்கு ஒரு ஏசி மெஷின் தேவைப்படும்.. இந்தியாவை வாட்டி வதைக்கப் போகும் வெப்பம்.. உலக வங்கி பகீர்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பருவநிலை மாற்றம் காரணமாக வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட உள்ளதாக உலக வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பருவ நிலை மாற்றம் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

அதிக அளவு மழை, வரலாறு காணாத வறட்சி, பூமியின் தட்பவெப்ப நிலை மாறுவது என பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

 அடடா.. சீனாவிலும் இந்த நிலைமையா.. ''வறட்சி, காட்டுத்தீ, வறண்ட ஆறுகள்''.. வெப்ப அலையுடன் போராட்டம் அடடா.. சீனாவிலும் இந்த நிலைமையா.. ''வறட்சி, காட்டுத்தீ, வறண்ட ஆறுகள்''.. வெப்ப அலையுடன் போராட்டம்

 பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்

பருவமழை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வது உள்ளிட்ட பிரச்சினைகளும் மனித குலத்திற்கும் மனிதன் வாழ்வியல் சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது இயற்கை ஆர்வலர்களின் வாதமும் விஞ்ஞானிகளின் வாதமுமாக இருக்கிறது. இதனால் கார்பன் உமிழ்வை முடிந்த அளவுக்கு குறைத்து இந்த பூமிப்பந்தை எதிர்கால தலைமுறையினருக்காக நாம் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

வெப்ப அலையால் பாதிக்கப்பட உள்ளதாக

வெப்ப அலையால் பாதிக்கப்பட உள்ளதாக

பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் ஒருபக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், வளர்ந்த, வளரும் நாடுகள் இடையேயான வேறுபாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு உறுதியான தீர்வை எட்டுவதில் சிக்கல் நீடித்துக்கொண்டே செல்கிறது. பருவநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிகத்துக்கொண்டே செல்லும் நிலையில், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

 3.5 கோடி பேருக்கு வேலை இழப்பு

3.5 கோடி பேருக்கு வேலை இழப்பு

2030 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 16 கோடி முதல் 20 கோடி மக்கள் வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்பை சந்திக்க நேரிடும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பம் காரணமாக உற்பத்தி துறையில் இழப்புகள் ஏற்படும் இதனால் 3.5 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெப்பத்தை தணிக்க குளுமைபடுத்துவதற்கான தேவை இப்போது இருப்பதை விட 8 மடங்கு அதிகரிக்கும். இதனால், ஒவ்வொரு 15 வினாடிகளுக்கு ஒரு ஏசி இயந்திரம் தேவைப்படும்.

மாற்று முறை மற்றும், புதுமையான எரிசக்தி

மாற்று முறை மற்றும், புதுமையான எரிசக்தி

இதனால் பசும இல்ல வாயுக்கள் வெளியேற்றம் 435 சதவிகிதம் அதிகரிக்கும். இதனால், குளுமை படுத்துவதற்கான தொழில்நுட்பங்களில் 2040 ஆம் ஆண்டுகளில் 1.6 டிரில்லியன் முதலீடு உருவாகும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் இந்தியா மாற்று முறை மற்றும் புதுமையான எரிசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியது அவசியம். இதனால், கார்பன் டை ஆக்சைடுவை குறைக்க முடியும். பசுமை இல்ல வாயுக்கள் அளவை குறைப்பதன் மூலம் 37 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவக்க முடியும்.

 சங்கிலி விநியோக முறையில்

சங்கிலி விநியோக முறையில்

அதேபோல், போக்குவரத்தின் போது அதீத வெப்பத்தால் உணவு மற்றும் பாராமெடிக்கல் பொருட்கள் வீணாவதை தடுக்க அதை குளிர்ந்த நிலையில் பரமரிப்பதற்கான சங்கிலி விநியோக முறையில் உள்ள இடைவெளிகளை சீர் செய்ய வேண்டும். போக்குவரத்தின் போது குளுமைப்படுத்துவதற்கான முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் உணவு வீண் ஆவதை 76 சதவீதம் குறைக்க முடியும். அதேபோல், கார்பன் உமிழ்வும் 16 சதவீதம் வரை குறையும்.

English summary
The World Bank has warned that due to climate change, the heat in India will be sweltering. As a result, one AC machine will be needed every 15 seconds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X