வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. மோதும் டிரம்ப்- பைடன்! தேர்வு நடைமுறை என்ன.. விவரம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் நான்கு ஆண்டுக்கு ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இன்று அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளது.

அமெரிக்க அரசியல் அமைப்பில் குடியரசு கட்சியும் ஜனநாயக கட்சிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. குடியரசு கட்சி சார்பில் தற்போது அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் (74) மீண்டும் போட்டியில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (78) போட்டியிடுகிறார்.

இன்றைய தேர்தலில் அமெரிக்க மக்கள் டிரம்புக்கோ பைடனுக்கோ நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். இதனை வாக்காளர்கள் குழு என்று அழைக்கலாம். அமெரிக்க அதிபர் தேர்தலில், மக்களால் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும்போது தகுதியற்ற யாரேனும் ஒருவர் அதிபராகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டதுதான் "எலக்டோரல் காலேஜ்" எனப்படும் வாக்காளர் குழு அமைப்பு.

அமெரிக்க அதிபர் தேர்தல்: பணக்கார இந்துத்துவவாதிகளின் பேராதரவை பெற்ற டொனால்ட் டிரம்ப்!அமெரிக்க அதிபர் தேர்தல்: பணக்கார இந்துத்துவவாதிகளின் பேராதரவை பெற்ற டொனால்ட் டிரம்ப்!

மாகாணம் வாரியாக

மாகாணம் வாரியாக

ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். இன்று அமெரிக்காவில் மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர்f;s இருக்கிறார்கள்.

யாருக்கு ஆதரவு

யாருக்கு ஆதரவு

இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றியடைய முடியும். பெரும்பாலான மாகாணங்களில், எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த வாக்காளர் குழு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும்.

குறைந்தவாக்குகள்

குறைந்தவாக்குகள்

உதாரணமாக, கலிஃபோர்னியா மாகாணத்தில் அங்கு வெற்றி பெறும் வேட்பாளருக்கு 99% வாக்குகள் கிடைத்தாலும் சரி அல்லது வெறும் 51% வாக்குகள் கிடைத்தாலும் சரி, அந்த மாகாணத்துக்கான மொத்தம் 55 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளும் வெற்றியாளருக்கே கிடைக்கும். அதனால்தான் மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரால் கூட, அமெரிக்காவில் அதிபராக முடியும். கடந்த தேர்தலில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றது இப்படித்தான்.

வெல்லப்போவது யார்?

வெல்லப்போவது யார்?

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று இரவு நடைபெறுகிறது. முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெறும், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் முழுமையாக வெளியாக நீண்ட நேரம் ஆகும். வெற்றி பெறுபவர் வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டடத்தில் ஜனவரி 20ஆம் தேதி, புதிய அதிபராக அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்பார். வெல்லப்போவது டிரம்ப்பா ஜோ பைடனா என்பது நாளை மறு நாள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் தெரிந்துவிடும்.

English summary
U.S. elections are usually held on the first Tuesday in November every four years. In that sense, the US election will take place today. Republicans and Democrats dominate the American political system. Donald Trump, 74, the current president of the Republican Party, is running again. Joe Biden, 78, is running for Democrat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X