உஷார்!! ஓமிக்ரான் எல்லா நாட்டிற்கும் பரவும்.. அதற்குள் இதை செய்யணும்.. அமெரிக்க ஆய்வாளர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஓமிக்ரான் உருமாறிய கொரோனா அச்சுறுத்தும் வகையிலும் மிக வேகமாகப் பரவக் கூடியதாக இருப்பதால் அனைவரும் முடிந்தவரை விரைவாக வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் தொற்றுநோய் வல்லுநர் ஆண்டனி பவுசி வலியுறுத்தியுள்ளார்.

உலகில் எந்தவொரு நாடும் கொரோனா வைரஸ் பாதிப்பை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பரவலை ஒழிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சில நாடுகள் மட்டுமே தீவிரமாக வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருந்தது. இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் உருமாறிய கொரோனா உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

புதிய கட்டுப்பாடுகள்

இந்த புதிய உருமாறிய கொரோனா மற்ற உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் அதிகமான மாற்றங்களைக் கொண்டிருப்பதால் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகப் பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குப் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தச் சூழலில் மத்திய அரசும் சர்வதேச பயணிகளுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

வேக்சின்கள்

வேக்சின்கள்

இந்நிலையில் இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் தலைவர் ஆண்டனி பவுசி கூறுகையில், "இந்த ஓமிக்ரான் கொரோனா மிக வேகமாகப் பரவக்கூடும் என்றே தோன்றுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முடிந்தவரை வேகமாக வேக்சின்களை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தடுப்பூசி எந்தளவுக்கு நமக்குத் தேவை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

கண்டிப்பாக வரும்

கண்டிப்பாக வரும்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏற்கனவே அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் உருமாறிய கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது நமக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய சவால். இந்த வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. நிச்சயம் நாம் நாட்டிற்கும் (அமெரிக்கா) வரும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைச் சமாளிக்க நாம் தயாராக உள்ளோமா என்பதே இப்போது நம்முன் இருக்கும் கேள்வி" என்றார்.

விமான போக்குவரத்து

விமான போக்குவரத்து

முன்னதாக கடந்த வாரம் தான் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 8 நாடுகள் உடனான விமான போக்குவரத்துக்கு அதிபர் பைடன் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். ஓமிக்ரான் தொடர்பாக வரும் நாட்களில் அமெரிக்கா முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யும்படி வேக்சின்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் வரை ஆகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அச்சம் ஏன்

அச்சம் ஏன்

பெரும்பாலான வேக்சின்கள் வைரஸ் மேற்புறத்தில் உள்ள புரோத ஸ்பைக்கை அழிக்கும் வகையிலேயே உருவாக்கப்படும். இருப்பினும், இந்த ஓமிக்ரான் கொரோனாவின் புரோத ஸ்பைக்கில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதால் ஆய்வாளர்கள் இது குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தற்போது வரை இது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வேக்சின் வேலை செய்யுமா?

வேக்சின் வேலை செய்யுமா?

இது தொடர்பான அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் நிறுவனத்தின் இயக்குநர் பிரான்சிஸ் காலின்ஸ், "இந்த ஓமிக்ரான் கொரோனா வைரசால் நாம் அச்சப்பட எந்தவொரு காரணமும் இல்லை. ஆனால் வேக்சின் ஏன் முக்கியம் என்பதை உணர்த்துவதாகவே இது உள்ளது. இதுவரை உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் கூட வேக்சின்கள் வேலை செய்கின்றன. கடந்த காலத்தை வைத்துப் பார்க்கும்போது வேக்சின்களே பொதுமக்களுக்குப் போதியளவு பாதுகாப்பைத் தருகிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+