ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்!
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 4வது வாரத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், இந்த தாக்குதல் அடுத்த 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த போர் நிறுத்த காலத்தில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

டிரம்ப் சொன்னது என்ன?
டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது, "ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்கு, அதாவது ஏப்ரல் 6, திங்கட்கிழமை இரவு 8 மணி வரை ஒத்திவைப்பதாக இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போலிச் செய்தி ஊடகங்களும் பிறரும் இதற்கு மாறாகத் தவறான தகவல்களைப் பரப்பி வந்தபோதிலும், பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக அமெரிக்கா சார்பில் 15 அம்ச அமைதி திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு ஈரான் இதுவரை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இருந்த போதிலும் அமெரிக்கா தாக்குதலை நிறுத்துவதாக தெரிவித்திருக்கிறது.
15 அம்ச கோரிக்கை
ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பதையும், சோதிப்பதையும் நிறுத்த வேண்டும்
ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கும் நிதி மற்றும் ஆயுத உதவிகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தனது ராணுவ ஆலோசகர்களையும், ஆதரவுப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
ஹார்முஸ் நீரிணையை உலக வர்த்தகத்திற்காக திறக்க வேண்டும்
ஹார்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட கூடாது
ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாட்டுப் பிரஜைகளை விடுவிக்க வேண்டும்.
வேலைக்கு ஆகாத விஷயம்
இப்படி 15 நிபந்தனைகளை அமெரிக்கா அடுக்கியிருக்கிறது. இது எல்லாம் அப்படியே ஈரான் பின்பற்றினால், நிச்சயம் அது பலவீனமாகும். எனவே, இந்த விஷயத்தில் ஈரான் யோசித்து வருகிறது. இதனை ஏற்றால் அதன் மீதுள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா நீக்கும். ஈரான் மீண்டும் உலக நாடுகளுக்குச் சுதந்திரமாக எண்ணெய் விற்க அனுமதிக்கப்படும் என்று டிரம்ப் கூறுகிறார்.
போரின் போக்கு
ஆனால், இதெல்லம் சும்மா கதை. ஈரான் மீதான பொருக்கு காரணம், டாலரின் ஆதிக்கத்தை தக்க வைக்க வேண்டும் என்பதுதான். எனவே, ஈரான் பின்பற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து, அமெரிக்கா போரை நீடிக்க பார்க்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications