இந்தியாவுக்கு மெகா ஜாக்பாட்.. ஒரேயடியாக 200+ பொருட்களுக்கான வரியை குறைத்த அதிபர் டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடாலடியாகப் பல்வேறு பொருட்கள் மீதும் இறக்குமதி வரியை விதித்தார். ஆனால், இது அமெரிக்க மக்களையே மிகக் கடுமையாகப் பாதிப்பதாக மாறிவிட்டது. இதனால் அமெரிக்க மக்கள் கடும் கோபமடைந்த நிலையில், டிரம்ப் சத்தமே இல்லாமல் 200+ பொருட்களுக்கான வரிகளை நீக்கியுள்ளார். இது இந்தியாவுக்குச் சாதகமான ஒரு நடவடிக்கையாகவே இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாகவே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். உலக நாடுகள் மீது அவர் பல்வேறு பொருட்களுக்கும் வரிகளை விதித்தார். இந்தியா உட்படப் பல நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகம் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கே எதிராகப் போனது
இறக்குமதி வரி விதிப்பதால் சம்பந்தப்பட்ட பொருட்களை அந்த நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் என்றும் இதன் மூலம் எதிர்காலத்தில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என சொல்லி டிரம்ப் வரிகளை விதித்தார். இருப்பினும், இது அமெரிக்கர்களுக்கே எதிராக அமைந்தது.
அதாவது வரி காரணமாக அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட கணிசமாக அதிகரித்துவிட்டது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வரி காரணமாக அதிகரித்ததால் மக்கள் கோபமடைந்தனர். அங்குச் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேக்களிலும் கூட டிரம்ப்பால் விலைவாசி அதிகரித்துவிட்டதாக அதிகப்படியான மக்கள் கூறியிருந்தனர். இதற்கிடையே சத்தமில்லாமல் டிரம்ப் அந்த வரிகளை நீக்கிவிட்டார்.
வரி குறைப்பு
இதனால் நிலைமையைச் சமாளிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு உணவுப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை நீக்கியுள்ளார். இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கே பெரிய நன்மையைக் கொடுப்பதாக இருக்கிறது. இதனால் மீண்டும் இந்தியா அமெரிக்கா இடையேயான ஏற்றுமதி அதிகரிக்கும் எனத் தெரிகிறது. முன்பே குறிப்பிட்டது போல விலைவாசி உயர்வைச் சமாளிக்கவே டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மாட்டிறைச்சி உட்படச் சுமார் 200க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கான வரிகளை டிரம்ப் நீக்கினார். இது முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
பின்னணி
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீதான வரியை டிரம்ப் 50%ஆக உயர்த்தினார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாகச் சொல்லி இந்த வரியை அவர் விதித்தார். வரி காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இந்திய விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி கடந்தாண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 12% குறைந்திருந்தது. வரி உயர்வு மட்டுமே இதற்கு ஒரே காரணமாக இருந்தது.
நன்மை
இந்தச் சூழலில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி விலக்குகள் மூலம் சுமார் $2.5 பில்லியன் முதல் $3 பில்லியன் வரையிலான ஏற்றுமதி பலனை பெறும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.. இது குறித்து ஏற்றுமதி கொள்கை தொடர்பாக அனுபவம் பெற்ற மூத்த அதிகாரி கூறுகையில், "இந்த நடவடிக்கை இந்திய விவசாயிகளுக்கு ரொம்பே நல்லது. குறிப்பாகத் தேயிலை, காபி, முந்திரி, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதியாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்" என்றார்.
வரி காரணமாக மசாலா மற்றும் சிறப்புத் தோட்டக்கலை ஆகிய பிரிவுகளில் றையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் போன சரக்குகள் கணிசமாகக் குறைந்திருந்தது. அது மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கும் என்றும் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதேநேரம் இடைப்பட்ட இந்தக் காலத்தில் வியட்நாம் மற்றும் இந்தோனேசியா நாடுகள் அமெரிக்காவுக்குத் தங்கள் சரக்குகளை அனுப்ப ஆரம்பித்துவிட்டதால் போட்டி அதிகரித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
தாக்க தயாராக.. 12 அணு குண்டுகளை ரெடியாக வைத்த இந்தியா.. வரலாற்றில் இதுதான் முதல் முறை.. குறி யாருக்கு? பெரும் பதற்றம் -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications