டிரம்பின் கழுகு பார்வை.. இரும்பு மனுஷனின் ஸ்லீப் ரகசியம்.. சிட்டி தூங்கினாலும் இந்த "சிட்டி" தூங்காது!
வாஷிங்டன்: டிரம்ப் எப்போதுமே சுறுசுறுப்பானவர்.. எந்நேரமும் தன்னுடைய பணியிலேயே முழு கவனத்தை செலுத்தக்கூடியவர்.. இதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார்.. இந்நிலையில், விமானப் பயணங்களிலும் தூங்காமல் விழித்தே இருப்பது ட்ரம்பின் வழக்கமான பழக்கம் என்று அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.. அத்துடன் டிரம்புடன் தனக்கு நேர்ந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்தும் நகைச்சுவையாக விவரித்துள்ளார்.
வாஷிங்டனில் வருடாந்திர "நேஷனல் பிரேயர் பிரேக்ஃபாஸ்ட்" நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.. இதில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் தனது தனிப்பட்ட பழக்கங்களில் ஒன்றை பற்றி சுவாரசியமாக பகிர்ந்தார்.. அப்போது டிரம்ப் சொல்லும்போது, நான் எப்பவுமே ஃபிளைட்டில் தூங்க மாட்டேன்.. நீண்ட நேர விமானப் பயணங்களில் கூட அவர் ஒருபோதும் தூங்க மாட்டேன்..
ஜன்னலில் வேடிக்கை
ஆனால் சாதாரண பயணிகள் விமானத்தில் ஏறியதுமே தூங்கிவிடுவார்கள்... ஆனால் நான் அப்படி கிடையாது.. ஃபிளைட்டில் தூங்குவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை.. நான் ஃபிளைட்டில் ஏறினால், ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பேன்..
எங்காவது ஏவுகணைகள் இருக்கிறதா? எதிரிகள் வருகிறார்களா? எதிரிகள் அங்கு இருக்கிறார்களா என்றெல்லாம் ஜன்னல் வழியாக கவனிப்பேன்... நிஜமாகவே நான் அப்படித்தான் செய்கிறேன்" என்று கிண்டலாக சொன்னார்..
ஃபிளைட்டில் டொனால்ட் டிரம்ப்
அத்துடன் தன்னுடைய முதல் பதவிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் டிரம்ப் அப்போது நினைவுபடுத்தினார்...
அதாவது ஒருமுறை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுவிற்கு எதிரான போரின்போது ஈராக்கிற்கு டிரம்ப் சென்றுள்ளார்.. அது சுமார் 20 மணி நேரம் விமான பயணமாகும்.. அப்போது ஒரு மூத்த ராணுவ அதிகாரி, "சார், உங்களுக்கு ஓய்வெடுக்க இடம் தயார் செய்திருக்கிறோம்.. தனியாக ரூம் ஒதுக்கியிருக்கிறோம் நீங்கள் கொஞ்ச நேரம் தூங்குங்க" என்று சொன்னார்களாம்.
அதற்கு டிரம்ப், "என்னாது தூக்கமா? எனக்கு தூக்கமே வேண்டாம். நான் நேரத்தை கொஞ்சமும் வீணாக்க மாட்டேன்... எப்போதும் விழித்தே இருப்பேன்.. வாங்க, இப்போதே பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை தொடங்கலாம்" என்றாராம்..
டிரம்ப் இப்படியெல்லாம் பேசுவது ஒன்றும் புதிது கிடையாது.. ஏற்கனவே இப்படி பலமுறை சொல்லியிருக்கிறார்..
டிரம்ப் தூங்கும் நேரம்
தேர்தல் பிரச்சாரங்களின்போது கூட, "நான் ரொம்ப நேரம் தூங்க தேவையில்லை.. மூன்று அல்லது 4 மணி நேரம் தூங்கினாலே எனக்கு போதும்" என்று தனது நாட்டு மக்களிடமே சொல்லியிருக்கிறார்..
ஆனால், உண்மையிலேயே ட்ரம்ப் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர்தான்.. அதனால்தான் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் இது ஒரு சவாலாகவே இருக்குமாம்
அமெரிக்க அமைச்சர் உடைத்த ரகசியம்
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தன்னுடைய அனுபவத்தை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.. அதில் டிரம்பின் தூக்கம் குறித்தும், டிரம்புடன் விமானத்தில் செல்லும்போது, தான் எப்படி திருட்டுத்தனமாக தூங்குவேன் என்பதையும் விவரித்துள்ளார்.
மார்கோ ரூபியோ சொல்கிறார், "ஃப்ளைட்டில் டிரம்ப் தூங்காமல், அங்கும் இங்கும் நடந்து கொண்டேயிருப்பார்.. யார் விழித்திருக்கிறார்கள், யார் யார் தூங்குகிறார்கள் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்.. வானத்தில் ஏவுகணைகள் வருகிறதா என்று வெளியே எட்டி எட்டி பார்த்து கண்காணித்துக் கொண்டே இருப்பார்..
மம்மி போல படுத்துக்குவேன்
அந்த நேரம்பார்த்து நான் தூங்கினால், என்னை ஒரு பலவீனமான நபர் என்று அதிபர் நினைத்துவிடுவாரோ என்ற பயம் எனக்குள் வந்துவிடும்.. அதனால் ஒரு போர்வையை, தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு ஒரு "மம்மி" போல சோபாவில் படுத்துக்கொள்வேன்..
அப்படி செய்தால் ஏதோ ஒரு ஊழியர் தூங்குகிறார் என்று நினைத்து டிரம்ப் என்னை கடந்து சென்றுவிடுவார்" என்றெல்லாம் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்..
அமைச்சர் மார்கோ இதை கிண்டலாக சொன்னாலும், ஃபிளைட்டில் போகும்போதுகூட, எப்போதும் டிரம்ப் விழிப்புடன் இருப்பார் என்பதே அவரது பேச்சில் மீண்டும் நிரூபணமாகி உள்ளது...!!
-
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications