அமெரிக்க முட்டாள்தனத்தால்.. சீனா அடுத்து என்ன செய்யப்போகிறது தெரியுமா.. டிரம்ப் முக்கிய "வார்னிங்"
வாஷிங்டன்: ‛‛அமெரிக்கா முட்டாள் போன்று செயல்படுவதால் சீனாவும் போர் தொடுக்க வாய்ப்புள்ளது'' என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய குண்டை வீசியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இன்று 8 வது நாளாக உக்ரைனில் போர் மேகங்கள் கலையவில்லை. ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. கீர்சன் நகரை ரஷ்ய படை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
கீவ் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவம் செயல்பட்டு வருகிறது. உக்ரைன் ராணுவமும் நாட்டை காக்கும் வகையில் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியா நடுநிலை
ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை 20க்கும் அதிகமான நாடுகள் விதித்துள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கிறது. போரை கைவிட்டு இருநாட்டு பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினிடம் கூறியுள்ளார். ஆனால் விலாடிமிர் புதின் போரை இன்னும் கைவிடவில்லை.

அடுத்த ‛டார்க்கெட்’
இந்நிலையில் தான் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய குண்டை வீசியுள்ளார். தைவான் மீது படையெடுக்க சீனா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛தைவான் மீது அடுத்த படையெடுப்பு நிகழலாம். இதை சீனா நிகழ்த்தலாம். ஏனென்றால், அமெரிக்கா முட்டாள்தனமாக செயல்படுகிறது. அமெரிக்க தலைவர் திறமையற்றவராக பார்க்கப்படுகிறார். படையெடுப்பை சீனா நிச்சயம் செய்யும். இது அவர்களுக்கான நேரம்.

சீனா அதிபர்
இதனால் தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை சீன அதிபர் ஜி ஜின்பிங் உன்னிப்பாக கவனித்து வருகிறார். ஜி ஜின்பிங் உளவு விஷயத்தில் திறமையானவர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது, அமெரிக்கர்களை அங்கேயே விட்டுவிட்டு வந்தது ஆகியவற்றை அவர் நினைத்து பார்க்கிறார். இதனால் சீனா நினைப்பதை செய்ய வாய்ப்புள்ளது'' என்றார்.

முன்பு நடந்தது என்ன
முன்னதாக ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் செயல்பாடு குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், ‛‛உக்ரைனின் ஒரு பெரும்பகுதியை சுதந்தரம் பெற்றதாக புதின் அறிவித்துள்ளார். அவர் ஒரு மேதை. உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் நபராக புதின் இருக்க போகிறார். எனக்கு புதினை நன்கு தெரியும். நான் அவருடன் நன்கு பழகினேன். அவர் என்னை விரும்பினார். நானும் அவரை விரும்பினேன்'' என பெருமையாக கூறினார்.
Recommended Video

2வது முறையாக முட்டாள்
அதன்பிறகு அடுத்த சில நாட்களிலேயே உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பயங்கரமானது. இத்தகைய சீற்றம், அட்டூழியம் ஒருபோதும் நடந்திருக்ககூடாது என ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை விமர்சித்து இருந்தார். மேலும் ரஷ்ய அதிபர் புதின், ஜோபிடனை வாத்திய கருவியான டிரம் போல் வாசிக்கிறார். உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு, ஜோபைடனின் பலவீனத்தை காட்டுகிறது. ஊமையாக ஜோபைடன் உள்ளார் என விமர்சனம் செய்ததோடு முட்டாள் என மறைமுகமாக விமர்சித்து இருந்தார். தற்போது 2வது முறையாகவும் ஜோபைடனை முட்டாள் என மறைமுகமாக டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications