வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நண்பரின் நச்சரிப்பால் வாங்கிய லாட்டரி.. ரூ1.2 கோடி பரிசு.. வாங்கிய முதல் லாட்டரியிலேயே கோடீஸ்வரர்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் நண்பர்களின் நச்சரிப்பு காரணமாக வேண்டா வெறுப்பாக வாங்கிய லாட்டரிக்கு ரூ.1.22 கோடி பரிசு விழுந்துள்ளதால் அந்த நபர் எல்லையில்லா மகிழ்ச்சியில் திகைத்து வருகிறார்.

லாட்டரி சீட்டுக்களால் ஒரே நாளில் உலக பிரபலம் அளவுக்கு சிலர் ஆகிவிடுகின்றனர். கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்ற ஒரு பேச்சு வழக்கு உண்டு.

அதற்கு சிறந்த உதாரணமாக லாட்டரி சீட்டில் பரிசடிக்கும் அதிர்ஷ்டசாலிகளை கூட சொல்லலாம்.

இது தான் காரணமா? கிருஷ்ணகிரியில் கொல்லப்பட்ட பாஜக புள்ளி! குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்! இது தான் காரணமா? கிருஷ்ணகிரியில் கொல்லப்பட்ட பாஜக புள்ளி! குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்!

அதிர்ஷ்டம் அடிக்கும் என்று

அதிர்ஷ்டம் அடிக்கும் என்று

ஆனால், ஆண்டுக் கணக்கில் லாட்டரி சீட்டுக்களை வாங்கி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து கடனாளியாகும் நிலைக்கு சிலர் செல்லும் அவலங்களும் இதில் இருக்கத்தான் செய்கிறது. கேரளாவில் அவ்வப்போது லாட்டரி சீட்டுக்களால் ஓவர் நைட்டில் ஒபாமா ரேஞ்சுக்க்கு பிரபலம் ஆகிவிடும் செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பாக பேச வைக்கும். என்றாவது ஒருநாள் நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்றும்.. அப்போது பெரும் பணக்காரர் ஆகிவிடலாம் என்றும் பலர் லாட்டரி சீட்டுக்களை வாங்கி வருகின்றனர்.

லாட்டரி சீட்டு

லாட்டரி சீட்டு

ஆனால் ஒருசிலருக்கு மட்டும் அதிர்ஷ்டம் அடிக்கும். லாட்டரி சீட்டால் அதிர்ஷ்டம் கொட்டி விடும் என வாங்கி குவிப்பர்களுக்கு ஒரு ரூபாய் கூட அடிக்காமல் இருந்து விடுகிறது. இன்னும் சிலருக்கு வாங்கிய முதல் சீட்டுக்கே கோடிகள் கொட்டுகிறது. இதை மெய்பிக்கும் வகையில்தான் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

வேண்டாய் வெறுப்பாக வாங்கிய லாட்டரி

வேண்டாய் வெறுப்பாக வாங்கிய லாட்டரி

லாட்டரிகள் வாங்குவதால் பணமும் நேரமும்தான் வீண் விரயம் ஆகும் என்று கூறி வந்த ஜான்சன் என்பவர், தனது நண்பரின் நச்சரிப்பு காரணமாக வேண்டாய் வெறுப்பாக லாட்டரி ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த லாட்டரியில் ரூ.1.22 கோடி பரிசு விழுந்ததால் ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் தற்போது. இது குறித்த விவரம் வருமாறு:-

நண்பர்கள் நச்சரிப்பு

நண்பர்கள் நச்சரிப்பு

விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஹம்ப்டன் பகுதியை சேர்ந்தவர் டேன்னி ஜான்சன். இவரது நண்பர்கள் எல்லாம் லாட்டரி பற்றி பேசும் போது, லாட்டரி என்பதெல்லாம் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் செயல். அதைப்பற்றி எல்லாம் என்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லி வருவராம். இருந்தாலும் அவரது நண்பர்கள் பலரும் கோடிக்கணக்கில் லாட்டரியில் பரிசு அடித்து இருப்பதை சுட்டிக்காட்டி நீயும் வாங்கினால் கோடிகளை அள்ளிவிடலாம் என்று நச்சரித்து வந்துள்ளனர்.

பவர் பிளே ஆப்ஷன்

பவர் பிளே ஆப்ஷன்

நண்பர்களின் நச்சரிப்பால் வேண்டா வெறுப்பாக ஜான்சனும் லாட்டரி ஒன்றை வாங்கியிருக்கிறார். இணையதளம் மூலமாக இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். அதேபோல், சமீப காலமாக மிகவும் பிரபலம், அடைந்து வரும் பவர் பிளே ஆப்ஷனையும் பயன்படுத்தியிருக்கிறார். பவர் பிளே ஆப்ஷன் என்பது லாட்டரி கேமில் வெற்றி பெறுபவர்களுக்கு கிடைக்கும் பரிசுத்தொகையை மும்முடங்காக அதிகரிக்கும் ஆப்ஷன் ஆகும். இணையதளத்தில் வாங்கிய இந்த லாட்டரியின் வெற்றிக்கான எண்களில் 5-ல் 4 எண்கள் இவரது லாட்டரி சீட்டுக்கு ஒத்துப் போகியுள்ளது.

ஒரு கோடியே 22 லட்சம்

ஒரு கோடியே 22 லட்சம்

50 ஆயிரம் டாலர் பரிசுத்தொகைக்கு இதுவே போதும் என்பதால் பரிசுத்தொகையை தட்டிச் சென்றுவிட்டார். வாங்கிய முதல் லாட்டரிக்கே பம்பர் பரிசாக 150,000 டாலர் பரிசுத்தொகை விழுந்ததால் ஜான்சன் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.1.22 கோடியாகும். இது குறித்து ஜான்சன் கூறுகையில், "லாட்டரி கேமில் ஒருபோதும் விளையாடியது இல்லை என்பதால் எனக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்றே எனக்கு தெரியாது. தற்போது இவ்வளவு தொகை கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

நண்பர்களுக்கே சர்ப்ரைசாக..

நண்பர்களுக்கே சர்ப்ரைசாக..

பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட எனக்கு இந்த தொகையை எப்படி செல்வு செய்வது என்ற எந்த திட்டமும் ஜான்சனிடம் இல்லை. இந்த பணத்தை நண்பர்களுக்கே சர்ப்ரைஸ் ஆக கொடுத்து விடலாமா என்ற யோசனையில் ஆழ்ந்து இருக்கிறார். உண்மையில் அவரைப்போலவே அவரது நண்பர்களும் அதிர்ஷ்டசாலிகள் தான் போல...

English summary
A man in America is overwhelmed with joy as he won a prize of Rs 1.22 crore in a lottery he reluctantly bought due to the nagging of his friends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X