அமெரிக்காவை அதிர வைத்த நிலநடுக்கம்.. டெக்சாஸில் மக்கள் அலறியடித்து ஓட்டம்.. ரிக்டரில் 5.4 ஆக பதிவு..
வாஷிங்டன்: அமெரிக்காவில் மேற்கு டெக்சாஸ் பகுதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டடங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் உயிருக்கு பயந்து அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அமெரிக்காவில் எண்ணெய் சார்ந்த தொழில் அதிகமாக டெக்சாஸில் நடக்கும் நிலையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று டெக்சாஸ். இங்கு எண்ணெய் (சார்) உற்பத்தி தொடர்பான தொழில்கள் பிரதானமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் டெக்சாஸ் வரலாற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று திடீரென்று ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

அதிர வைத்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் மேற்கு பகுதியான டெக்சாஸில் நேற்று மாலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் நேரப்படி மாலை 5.35 மணிக்கு டெக்சாஸின் சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு டெக்சாஸ் பன்ஹேண்டில் அருகே உள்ள லுபாக் வரை மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒடெசா வரையிலான பகுதியில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. மேலும் வீட்டில் இருந்து பொருட்கள் உருண்டு விழுந்தன.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இதனால் அதிர்ந்துபோன மக்கள் உயிர் பயத்தில் வீடு, கட்டடங்களை விட்டு அலறியபடி வெளியே ஓடிவந்து வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் உணரப்பட்டது. அதன்பிறகு நிலைமை சரியானது. இதையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலநடுக்கம் டெக்சாஸ் வரலாற்றில் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரிக்டரில் 5.4 என பதிவு
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இது மிட்லாண்டின் வடமேற்கு திசையில் சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிலும் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்காவின் புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது. இதுபற்றி அந்த மையம் கூறுகையில், ‛‛தற்போதைய நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது. டெக்சாஸ் வரலாற்றில் இது 4வது வலுவான நிலநடுக்கமாக இருக்கும்'' என தெரிவித்து இருந்தது.

சேதம் தெரியவில்லை
ஆனால் கொலராடோவில் உள்ள தேசிய நிலநடுக்க தகவல் மையத்தில் செயல்பட்டு வரும் புவிசார் இயற்பியல் நிபுணர் ஜனா பர்ஸ்லி கூறுகையில், ‛‛டெக்சாஸில் உள்ள அமரில்லோ மற்றும் அபிலினில் இருந்து மேற்கு கார்ல்ஸ்பாட் வரை 1,500க்கும் அதிகமான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. தற்போதைய நிலநடுக்கத்தில் சேதம் பற்றிய விபரம் தெரியவில்லை'' என்றார்.

உயிர் பலி இல்லை என தகவல்
அதாவது சேதம், உயிர்பலி உள்ளிட்ட எந்த விபரமும் வெளியாகவில்லை. இருப்பினும் கூட பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக ஒரு மாதத்துக்கு முன்பு இதேபோன்று மேற்கு டெக்சாஸில் நிலநடுக்கம் உணரப்பட்டது. தற்போது நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications