கூண்டோடு ராஜினாமா செய்யும் ஊழியர்கள்: "நான் ஏன் கவலைப்பட வேண்டும்?" கூலாக பதில் சொல்லும் எலான் மஸ்க்
வாஷிங்டன்: ஊழியர்கள் கடினமாக பணியாற்ற தயராக வேண்டும் என்றும் இல்லையென்றால் கிளம்பலாம் என்று எலான் மஸ்க் கூறியதையடுத்து ட்விட்டர் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் ராஜினாமா செய்ய தொடங்கியிருக்கின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், சிறந்த ஊழியர்கள் இங்குதான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
ட்விட்டரை வாங்கியதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.
உலகின் பெரும் மதிப்பு கொண்ட கார் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சி இ ஓவாக இருக்கும் எலான் மஸ்க், தற்போது தனது முழு கவனத்தையும் ட்விட்டர் மீதுதான் செலுத்தி வருகிறார்.

வாரம் 80 மணி நேரம் பணி செய்ய வேண்டும்
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் வருவாயை பெருக்கி அதிக லாபத்தை பெறத்தொடங்கவில்லை என்றால் திவால் நிலையை சந்திக்கும் என்று எச்சரித்து இருந்த எலான் மஸ்க், பல்வேறு செலவீன குறைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து பரபரப்பாக்கினார். குறிப்பாக ஊழியர்கள் வாரம் 80 மணி நேரம் பணி செய்ய தயாராக வேண்டும் என்றும் ஊழியர்கள் கடினமாக உழைக்க தயாராக இருங்கள் அல்லது 3 மாத சம்பளத்துடன் ராஜினாமா செய்யலாம் என்று தனது ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியிருந்தார்.

ட்விட்ட ஊழியர்கள் ராஜினாமா
ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனியாக இந்த இமெயில் அனுப்பப்பட்டது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஊழியர்கள் விரைவாக முடிவெடுக்க ஒருநாள் கால அவகாசத்தையும் எலான் மஸ்க் அளித்து இருந்தார். எலான் மஸ்க்கின் இந்த எச்சரிக்கையை அடுத்து ட்விட்டர் ஊழியர்கள் பலரும் மொத்தமாக ராஜினாமா செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

கூண்டோடு ராஜினாமா செய்த ஊழியர்கள்
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்து உள்ளது ட்விட்டர் நிறுவனத்திற்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்து இருப்பதால் சில இடங்களில் ட்விட்ட அலுவலம் மூடப்பட்டு உள்ளது. ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தது குறித்து தனது ட்விட் பதிவில் எலான் மஸ்க் கருத்து பதிவிட்டுள்ளார்.

எந்த கவலையும் இல்லை
எலான் மஸ்க் தனது ட்விட் பதிவில், ''சிறந்த நபர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். எனவே எனக்கு எந்த கவலையும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். ஊழியர்கள் மொத்தம் மொத்தமாக ராஜினாமா செய்ததால் ட்விட்டர் அலுவலகம் மூடப்பட்ட சில மணி நேரங்களில் இந்த பதிவை எலான் மஸ்க் பதிவிட்டு இருக்கிறார். இதற்கிடையே, #riptwitter, #GoodByeTwitter போன்ற ஹேஷ்டேக்குகள் இன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. எலான் மாஸ்க்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் Rip Twitter என்பதை குறிக்கும் வகையில் கல்லறை ஒன்றின் படத்தையும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

120 மணி நேரம் உழைப்பதாக
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே இவரைப்பற்றிய செய்திகள் இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு மிகவும் பரபரப்பு அடைந்து வருகிறார். வாரத்திற்கு 120 மணி நேரம் உழைப்பதாக கூறியிருக்கும் எலான் மஸ்க், தூங்குவதற்கு மட்டுமே தனது ஓய்வு என்று வெளிப்படையாக கூறி இருந்தார்.

முன்பை விட வலுவானதாக
ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை பெருக்க எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புளு டிக் கட்டண சேவையால் போலி கணக்குகள் கிடு கிடுவென உயர்ந்தன. இதனால் தடாலடியாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க், மீண்டும் வரும் 29 ஆம் தேதி முதல் புளு டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடங்கும் என்று கூறியிருக்கிறார். முன்பை விட வலுவானதாக கொண்டு வரப்போவதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications