வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20 ஆண்டுகளில் உலகில் பேரழிவை ஏற்படுத்திய 5 வைரஸ்கள் சீனாவில் இருந்தே பரவியது.. அமெரிக்கா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளில் உலகில் பேரழிவை ஏற்படுத்திய சார்ஸ், ஏவியன் ஃப்ளு, பன்றிக் காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட 5 வைரஸ் நோய்கள் சீனாவிடம் இருந்துதான் மற்ற நாடுகளுக்கு பரவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.

Recommended Video

    5 Plagues From China In 20 Years. Got To Stop: US

    கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹானில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் அடுத்த ஒரு மாதத்தில் மின்னல் வேகத்தில் பரவியது. இதை தொற்று வியாதி என்று சீனா உலக நாடுகளை ஜனவரியில் எச்சரித்தது. இந்த வைரஸ் உலகத்தையே சுகாதார அவசர நிலைக்கு ஜனவரி இறுதிக்குள் தள்ளியது. மார்ச் மாதத்திற்குள் உலகின் பெரும்பாலான நாடுக்குள் பரவியது.

    இந்நிலையில் சுமார் 200 நாடுகளில் 44 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது. இதுவரை 2.96 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 16.44 லட்சம் பேர் இதுவரை குணமாகி உள்ளனர். தற்போதைய நிலையில் உலகம்முழுவதும் 24.58லட்சம் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனா இயற்கையான வைரஸ் அல்ல.. ஆய்வகத்திலிருந்து பரவியது.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரிகொரோனா இயற்கையான வைரஸ் அல்ல.. ஆய்வகத்திலிருந்து பரவியது.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

    சீனா மீது குற்றச்சாட்டு

    சீனா மீது குற்றச்சாட்டு

    இந்த நோய்யை கட்டுப்படுத்தவோ, நோயை குணப்படுத்தவோ மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அத்துடன் தொற்று நோயாக இருப்பதால் இதை தடுக்க முடியாமல் உலகமே திணறி வருகிறது. உலகிலேயே மிகமோசமாக அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 84 ஆயிரம் பேர் நோய்க்கு இதுவரை பலியாகி உள்ளனர். 14லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவியது முதலே சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக இருந்துவிட்டதாக சீனா மீது குற்றம்சாட்டி உள்ளது கொரோனா போன்ற இன்னொரு நோய் சீனாவில் இருந்து மீண்டும் பரவுவதை ஏற்கவே முடியாது என்றும் அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.

    மீண்டும் உற்பத்தியாககூடாது

    மீண்டும் உற்பத்தியாககூடாது

    இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில். சீனாவில் இருந்து பேரழிவை ஏற்படுத்தும் வைரஸ்கள் மீண்டும் உற்பத்தி ஆகுவதை ஏற்கவே முடியாது என்று உலக நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன. சீனாவின் ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்ததா அல்லது மார்க்கெட்டில் இருந்து வந்ததா என்பது முக்கியம் அல்ல. சீனாவில் இருந்து வந்ததே பெரிய பிரச்னை தான்..

    உலகிற்கு பரவிய வைரஸ்கள்

    உலகிற்கு பரவிய வைரஸ்கள்

    கடந்த 20 ஆண்டுகளில் உலகில் பேரழிவை ஏற்படுத்திய சார்ஸ், ஏவியன் ஃப்ளு, பன்றிக் காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட 5 வைரஸ்கள் சீனாவிடம் இருந்துதான் உலக நாடுகளுக்கு பரவி உள்ளது. உலக நாடுகளை நோய்களை பரவ விட்டு சீனா சேதப்படுத்திக் கொண்டுள்ளது. . இதை சீனா நிறுத்த வேண்டும். நாங்கள் சுகாதாரத்துறை வல்லுனர்களை சீனாவிற்கு அனுப்புகிறோம் என்று சீனாவிடம் தெரிவித்தோம். ஆனால். அவர்கள் அதை ஏற்காமல் நிராகரித்து விட்டார்கள்.

    சீனாவுக்கு உதவிகள் தேவை

    சீனாவுக்கு உதவிகள் தேவை

    இனிமேல் சுகாதாரத்தை சீனா முறையாக கையாள வேண்டும். இன்னும் கொரோனா போன்ற மற்றொரு சம்பவம் சீனாவில் இருந்து பரவுவதை ஏற்கவே முடியாது.உலக பொருளாதாரமே முடங்கி உள்ளது.. இது முதன்முறையல்ல. கடந்த 20 ஆண்டுகளில் இத்துடன் சேர்த்து 5 முறை உலக பொருளாதார முடங்கி உள்ளது. சீனாவுக்கு இந்த விஷயத்தில் மற்ற நாடுகளின் உதவி தேவைப்படுகிறது. அதற்கான நடவடிக்கையை அமெரிக்காவும் தொடங்கியுள்ளது. இன்னொரு சுகாதார பேரழிவு ஏற்பட்டுவிடக்கூடாது" இவ்வாறு கூறினார்.

    English summary
    "We've had five plagues from China in the last 20 years. We've had SARS, avian flu, swine flu, COVID-19 now: US Top Security Advisor
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X